சன் குடும்ப விழாவிற்கு வந்த குஷ்பு… ரெட் கார்பெட் வரவேற்பு

By Mayura Akilan

சென்னை: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்பு மீண்டும் சன் குடும்பத்திற்குள் எப்படி வந்தார் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? சன் டிவி வழங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில்தான் குஷ்பு பங்கேற்றார்.

சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் சிறப்பாக நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சன் டிவி., ‘சன் குடும்பம் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. சின்னத்திரை கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

Kushboo gets royal welcome in Sun TV's awards function

18 சீரியல்கள்

சன் டி.வி.யில் தினமும் காலை முதல் மாலை வரை, ‘சொந்த பந்தம்', ‘பொம்மலாட்டம்', ‘தேவதை', ‘மரகத வீணை', ‘பொன்னூஞ்சல்', ‘இளவரசி', ‘வள்ளி', ‘கல்யாணப்பரிசு', ‘பிள்ளை நிலா', ‘முந்தானை முடிச்சு', ‘பாசமலர்', ‘நாதஸ்வரம்', ‘தெய்வ மகள்', ‘வம்சம்', ‘தென்றல்', ‘வாணி ராணி', ‘சக்தி', ‘அழகி' ஆகிய பதினெட்டு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தத் தொடர்களில் இருந்தே விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

26 பிரிவுகளில் விருதுகள்

சிறந்த கதாநாயகன், கதாநாயகி, அப்பா, அம்மா, மாமியார், மருமகள், அண்ணன், தங்கை, வில்லன், வில்லி, நகைச்சுவை நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, திரைக்கதை, இசை உட்பட மொத்தம் 26 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

பிரம்மாண்டவிழா

ஒவ்வொரு பிரிவில் இருந்தும் நான்கு பேர் பரிந்துரைக்கப்பட்டு அதில் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விழா, மாமல்லபுரத்தில் உள்ள கான்புளூயன்ஸ் கன்வென்சன் சென்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

சிறந்த கதாநாயகன்

இந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருதுக்கு ‘பொம்மலாட்டம்‘ தொடரில் நடிக்கும் ஸ்ரீகுமார், ‘நாதஸ்வரம்' தொடரில் நடிக்கும் திருமுருகன், ‘தெய்வமகள்' தொடரில் நடிக்கும் கிருஷ்ணா, ‘தென்றல்' தொடரில் நடிக்கும் தீபக் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

சிறந்த நாயகி

சிறந்த கதாநாயகி விருதுக்கு ‘வாணி ராணி' ராதிகா, ‘நாதஸ்வரம்' ஸ்ருத்திகா, ‘தெய்வமகள்' வாணி போஜன், ‘தென்றல்' ஸ்ருதி ஆகிய 4 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.

சிறந்த ஜோடி

சிறந்த ஜோடிக்கான விருதுக்கு ‘பொம்மலாட்டம்‘ ஸ்ரீகுமார்-ஸ்ரீஷா, ‘தென்றல்' தீபக்-ஸ்ருதி, ‘நாதஸ்வரம்' திருமுருகன் - ஸ்ருத்திகா, ‘பொன்னூஞ்சல்' விஸ்வா- அபிதா பரிந்துரைக்கப்பட்டனர்.

வாழ்நாள் சாதனையாளர்

கடந்த 16 ஆண்டுகளாக சன் டிவி சீரியலில் ராதிகாவிற்கு அப்பாவாக நடிக்கும் ரவிகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த அக்கா, அண்ணன்

சிறந்த அக்காவாக சீமா, சிறந்த சகோதரனாக - ஸ்டாலின்

சிறந்த துணை நடிகராக பப்லு, சிறந்த துணை நடிகையாக பப்லு, சிறந்த துணை நடிகையாக அனுராதா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த மருமகன் விஸ்வா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் என்னகாரணமே விருது வாங்க அவர் வரவில்லை.

நெகிழ்ந்த பப்லு

சிறந்த துணை நடிகர் விருது பெற்ற நடிகர் பப்லு என்ற பிரிதிவிராஜ், தனது மகன், மனைவி கையினால் விருது பெற்றார். அந்த தருணத்தை நெகிழ்ச்சியுடன் அனுபவித்தாக கூறினார்.

ராதிகாவின் நினைவுகள்

நிகழ்ச்சியில் மனோபாலா, நளினி ஜோடியின் காமெடி நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அரண்மனை படத்தை உல்டா செய்திருந்தனர். ராதிகா, ரம்யா கிருஷ்ணனிடம் அவர்களின் பழைய நினைவுகளை பேட்டி எடுத்தார் மனோபாலா.

சிறந்த வில்லிகள்

விழாவில் சிறந்த வில்லிகளாக வள்ளியில் இந்திரசேனாவாக நடித்த ராணியும், தெய்வமகள் தொடரில் நடித்த காயத்ரியும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

குடும்ப விழாவில் குடும்பமாக

சின்னத்திரை கலைஞர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொண்டனர். சின்னத்திரை கலைஞர்களின் நடனம், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கூடுதல் கவர்ச்சியில் ஓவியா

சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுவிழா என்றாலும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜா, ராய் லட்சுமி, பூர்ணா, விசாகா சிங், நந்திதா, ஓவியா ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். நிகழ்ச்சியில் ஓவியாவின் கவர்ச்சி கூடுதலாகவே இருந்தது.

ஒரே புகழ்மழைதான்

நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், ஆதி, கிருஷ்ணா, ஷாம், வசந்த் விஜய், வைபவ், வெங்கட்பிரபு, சிவா, ஆரி, திலீபன் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பிரபு சாலமன், சரண், கண்ணன், துரை, பாடலாசிரியர் விவேகா உட்பட பலர் கலந்துகொண்டதோடு சன்டிவி நிறுவனத்திற்கு ஒரே புகழ்மழை பொழிந்தனர் என்பதுதான் சிறப்பம்சம்.

குஷ்பு மேட்டருக்கு வருவோம்

இந்த விழா மாமல்லபுரத்தில் நடைபெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. சன்டிவியில் நேற்று ஒருபகுதியைத்தான் ஒளிபரப்பினார்கள் அடுத்த பகுதி வரும் 7ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. எனவே எந்த கட்சியிலும் இல்லாத போதுதான் குஷ்பு சன்டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் எனவே அவர் சன் குடும்ப விழாவில் பங்கேற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு ஆச்சரியமாக இருக்காது என்றே நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X