தந்தி டி.வி.யில் அச்சம் தவிர்: நடிகை குஷ்புவின் மற்றொரு அவதாரம்
நடிகை குஷ்பு, ரியாலிட்டி ஷோ ஒன்றினை தந்தி டிவியில் தொகுத்து வழங்க உள்ளார்.
சினிமாவில் பிரபலமாக இருந்தபோதே சீரியலில் நடித்த குஷ்பு, ஜாக்பாட் மூலம் ஜெயா டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானார். விதவிதமான ஜாக்கெட்டுகள், கொஞ்சிப் பேசும் தமிழ் என அந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றது.
ஜெயாடிவியில் இருந்து வெளியேறி கலைஞர் டிவியில் சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராகவும் இருக்கும் குஷ்பு இப்போது ரியாலிட்டி ஷோ ஒன்றினை தொகுத்து வழங்குகிறார்.

அச்சம் தவிர்
தந்தி தொலைக்காட்சியில் குஷ்பு தொகுத்து வழங்கும் ரியாலிட்டிஷோவின் பெயர் அச்சம் தவிர். பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் இந்த நிகழ்ச்சி ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகவுள்ளது.

தைரியம் வேண்டும்
நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் பிரச்சினைகள்... வேதனைகள். நம் கண்ணுக்கு எதிரிலேயே கொலைகள், தற்கொலைகள், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், அக்கிரமமான கட்டப்பஞ்சாயத்துகள் நடக்கிறபோது வாய்பொத்தி பதறுகிறோம். அடுத்த நிமிடம் மவுனமாகி விடுகிறோம். அச்சம், பயம் விளைவுகளை எப்படி எதிர்கொள்வது என்ற நடுக்கம்தான் காரணம். எனவே அச்சம் தவிர் நிகழ்ச்சியில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை தருகிறார்களாம்.

பிரச்சினைகளை முறையிடுங்கள்
பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் தங்கள் பிரச்சினைகளை குஷ்புவிடம் நேரடியாக முறையிடுகிறார்கள்.அதற்கான மேடை தான் இது. அவற்றை அலசி ஆராயும்போது தெளிவு பிறக்கிறது. தீர்வும் கிடைக்கிறது.

கம்பீர அவதாரம்
‘அச்சம் தவிர்' குஷ்புவின் இன்னொரு கம்பீர அவதாரம். எதிர்காலத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறபோது அவற்றை எதிர்கொள்ள முடியும் என்ற புதிய நம்பிக்கையும் உருவாகிறது என்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து நாயகி
சும்மாவே குஷ்புவின் கருத்துக்களுக்கு எதிர்ப்புகள் அதிகம் எழும். இந்த நிகழ்ச்சியில் அவர் கூறும் முடிவுகளும், கருத்துக்களும் எத்தனை எதிர்ப்பலைகளை உருவாக்குமோ?


Click it and Unblock the Notifications











