ஜீ தமிழில் ஆட்டம் பாட்டம் அமர்க்களமாய் குஷ்பு

By Mayura Akilan

ஜீ தமிழில் நம்ம வீட்டு மகாலட்சுமி என்ற புத்தம் புதிய கேம் ஷோ தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை குஷ்பு தொகுத்து வழங்குகிறார்.

முற்றிலும் பெண்களுக்கு மட்டுமேயான இந்த நிகழ்ச்சியில் நான்கு சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

நிகழ்ச்சியின் சுற்றுக்கள் பழையவைதான் என்றாலும் அதனை கலகலப்பாக கொண்டு செல்கிறார் குஷ்பு.

குஷ்பு ஸ்டைல்

குஷ்பு ஸ்டைல்

ஜெயா டிவியில் ஜாக்பாக் நிகழ்ச்சியில், விதம் விதமான ஜாக்கெட்டை போட்டு பிரபலப்படுத்தியவர் குஷ்பு. நம்ம வீட்டு மகாலட்சுமி நிகழ்ச்சியில் ஆடை அலங்காரம் அமர்களமாக இருக்கிறது.

சின்னத்திரை நட்சத்திரங்கள்

சின்னத்திரை நட்சத்திரங்கள்

நிகழ்ச்சியின் பெயருக்கு ஏற்ப முதல்நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள் மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டிருந்தது சிறப்பம்சம்.

தமிழ் பேசும் சுற்று

தமிழ் பேசும் சுற்று

நிகழ்ச்சியில் குஷ்பு பேசும் தமிழ் சொல்லவே வேண்டாம். பாதிக்குப் பாதி ஆங்கிலக் கலப்பு இருக்கும். ஆனால் நம்ம வீட்டு மகாலாட்சுமி நிகழ்ச்சியின் முதல் சுற்று ‘செந்தமிழ் பேசும் தமிழச்சி'. இதில் ஒரு நிமிடம் முற்றிலும் தமிழில் மட்டுமே பேசவேண்டும். ஆங்கில வார்த்தைகளை இடையில் சேர்க்கக் கூடாது. அவ்வாறு தவறுதலாக ஆங்கில வார்த்தைகளை பேசிவிட்டால் 5 மதிப்பெண்கள் மைனஸ் செய்கிறார் குஷ்பு

கண்டுபிடி கண்டுபிடி

கண்டுபிடி கண்டுபிடி

பிரபலமானவரின் முகத்தை மறைத்து திரையில் ஒளிரச் செய்கின்றனர். சரியான நபரை கண்டுபிடித்து கூறினால் அவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படுகிறது.

திறந்திடு சீஸேம்

திறந்திடு சீஸேம்

அதேபோல் டிரம்மை திறந்து அதனுள்ளே இருக்கும் பரிசுப் பொருட்களை கண்டுபிடிக்கின்றனர். மூன்று சுற்றுக்களுமே ஏற்கனவே பழக்கப்பட்டதுதான். வித்தியாசமான கேம் ஷோ என்றால் சின்னத்திரை நட்சத்திரங்கள், அதுவும் பெண் நடிகைகள் மட்டுமே பங்கேற்கின்றனர்.

ஜொலித்த நடிகைகள்

ஜொலித்த நடிகைகள்

டிசம்பர் 14ம் தேதி முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நம்ம வீட்டு மகாலட்சுமி தொடங்கியுள்ளது. சனி, ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. முதல்நாள் முதல் ஷோவில் நட்சத்திரங்கள் ஷில்பா, ஷிவானி நந்தினி, தேவி க்ருபா ஆகியோர் பங்கேற்றனர். குஷ்புவின் உடை அலங்காரம் இதிலும் தனித்துவமாய் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X