»   »  இது தீர்வுக்கான களம்... குடும்ப பஞ்சாயத்துக்கு இறங்கிய குஷ்பு!

இது தீர்வுக்கான களம்... குடும்ப பஞ்சாயத்துக்கு இறங்கிய குஷ்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் செண்டிமெண்ட், எமோஷனல் படங்கள் வரவேற்பு பெறுவது இல்லை. அதற்கு பதிலாக எமோஷனலை தூண்டிவிடும் ரியாலிட்டி ஷோக்கள் ஹிட் அடிக்கின்றன. சரி இதையே முழு நிகழ்ச்சியா பண்ணினால் என்ன... என்று தொடங்கப்பட்டதுதான் சொல்வதெல்லாம் உண்மை.

Kushbu to conduct Reality show for Sun TV

நான்கு பேர் முன்னிலையில் பேசினாலே மானம் போகும் என்ற ரீதியில் இருக்கும் விஷயங்களை டிவியில் காண்பித்து ஊர் மானத்தை வாங்குகிறார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியில் ஏற்பட்ட அவமானத்தால் சமீபத்தில் கூட ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கு சேனல் மீது பாய்ந்திருப்பதால் சில வாரங்களுக்கு நிகழ்ச்சியையே நிறுத்திவைக்கலாமா என்று சேனல் யோசிப்பதாக கேள்வி.

இன்னொரு பக்கம் இதே ரூட்டை பிடித்து டிஆர்பி ஏற்ற திட்டமிட்டிருக்கிறது சன் டிவி. பஞ்சாயத்து பண்ணவிருப்பவர் குஷ்பு. நிஜங்கள் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கு டேக்லைன் என்ன தெரியுமா? 'இது தீர்வுக்கான களம்'.

விரைவில் அறிவிப்பு வரலாம்! தீர்வு கிடைக்குமா? இன்னொரு பஞ்சாயத்து தொடங்குமா? பார்ப்போம்.

English summary
Senior actress cum politician Kushbhu is now entering to reality shows for Sun TV

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X