ஓவியாவின் எண்ணம் நிறைவேறுமா?

By Mayura Akilan

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குஷ்புவின் பார்த்த ஞாபகம் இல்லையோ' தொடர், 350-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

கண்ணகி வழக்கில் கலியபெருமாளின் எச்சரிக்கையும் தன் அத்தையின் அதிருப்தியையும் மீறி ஓவியா தீவிரமாக ஈடுபட, அதன் விளைவாக கலியபெருமாளின் மறைமுக தாக்குதலுக்கு ஓவியா குடும்பம் உள்ளாகிறது.

உச்சக்கட்டமாக ஓவியாவை கொலை செய்ய கலியபெருமாள் தீட்டிய திட்டத்தில் ரமேஷ் உயிருக்கு போராடும் விபரீதம் நேர்ந்து விடுகிறது. அந்த நிலையிலும் ஓவியா கண்ணகிக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்ற உறுதியுடன் கோர்ட்டுக்கு வந்து வாதாடுகிறாள்.

நீதிமன்றத்தில் போராட்டம்

நீதிமன்றத்தில் போராட்டம்

கலியபெருமாளுக்காக கோர்ட்டில் ஆஜரான சிந்தாமணி, கண்ணகியின் நடத்தையை தவறாக விமர்சித்து வழக்கை திசைதிருப்பும் நேரத்தில், கண்ணகி தான் சிந்தாமணியின் மகள் என தெரிய வருகிறது.

வெளியேற்றப்படும் ஓவியா

வெளியேற்றப்படும் ஓவியா

தன் மகளை இந்த நிலைக்கு கொண்டு வந்ததற்காக சிந்தாமணி ஓவியா மீது ஆத்திரங்கொண்டு அவளை பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்குகிறாள். அந்த சூழ்நிலையில் கார்த்திக், கருணாகரன் கொலை வழக்கில் மாட்டி சிறை செல்ல, அவனை வெளியே கொண்டு வர போராடிய ஓவியாவை சிந்தாமணி தன் சதியால் பார் கவுன்சிலிங்லிருந்து அப்புறப்படுத்துகிறாள்.

ஓவியாவின் தவிப்பு

ஓவியாவின் தவிப்பு

கணவனை வெளியே கொண்டு வர முடியாத ஓவியா, குடும்பத்தினர்களின் கோபத்துக்கு உள்ளாகி அனைவருக்கும் வேண்டாதவளாகிறாள்.

இந்த நிலையை மாற்ற ஓவியா மேற்கொள்ளும் முயற்சிகளும் வெங்கட்டின் உதவியுடன் கார்த்திக்கை வெளியே கொண்டு வர சந்திக்கும் போராட்டங்களும் இனி வரவிருக்கும் உணர்ச்சி பூர்வ எபிசோடுகள்.

நந்தினியின் நினைவு

நந்தினியின் நினைவு

மற்றொரு புறம் நந்தினி ஆஸ்பத்திரியில் சுயநினைவு இல்லாதிருக்கும் நிலையில் செந்திலை பழிவாங்க மதுபாலா திட்டம் போடுகிறான். நந்தினியின் குழந்தையை வைத்து செந்திலின் மனதில் இடம் பிடிக்க முயற்சி செய்கிறாள். ஒரு கட்டத்தில் செந்தில் மனது மதுபாலாவை ஏற்றுக் கொள்ளும் நிலையில் நந்தினிக்கு சுயநினைவு வருகிறது.

வினோதினி – விமல் காதல்

வினோதினி – விமல் காதல்

சாந்தினியின் தங்கை வினோதினி விமலை விரும்ப... வினோதினி காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சாந்தினி ஆதரவு தெரிவித்து திருமணப்பேச்சுக்கு முன் வருகிறாள். அப்போது தன்னை பழிவாங்கிய அபிராமியின் தம்பி தான் விமல் என தெரிய வருகிறது.

அக்கா – தங்கை போராட்டம்

அக்கா – தங்கை போராட்டம்

உடனே வினோதினியின் திருமணத்திற்கு மறுப்பு சாந்தினி மறுப்பு சொல்கிறாள். இதனால் அக்கா- தங்கை தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்கிறார்கள். வினோதினியை மீட்டுக் கொண்டு வருவதற்கான சாந்தினியின் போராட்டங்கள் தொடரின் அடுத்த கட்ட பரபரப்பு.

குஷ்புவின் நடிப்பில்

குஷ்புவின் நடிப்பில்

இந்த தொடரில் குஷ்பு, சீனு, ஸ்ருதி, பரத் கல்யாண், விச்சு, நடராஜ், விஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரியேட்டிவ் ஹெட்: குஷ்பு சுந்தர். திரைக்கதை வசனம்: கே.என்.நடராஜ். ஒளிப்பதிவு: பொன்ஸ் சந்திரா. இயக்கம்: என்.ப்ரியன். தயாரிப்பு: அவ்னி டெலிமீடியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X