ரூபாய் நோட்டுல சிரிக்கிறது பவர் ஸ்டார்...!

By Mayura Akilan

குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றின் முன்னோட்டம் இப்போது சன் டிவியில் வந்து கொண்டிருக்கிறது. அதில் தொகுப்பாளர் கேட்கும் கேள்விகளும் அதற்கு குழந்தைகள் கூறும் பதில்களும்தான் கவலைக்குரியதாக உள்ளன.

வாரந்தோறும் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் குட்டிச் சுட்டீஸ் நிகழ்ச்சியை இமான் அண்ணாச்சி தொகுத்து வழங்கி வருகிறார். வரிசையாக குழந்தைகளை உட்கார வைத்து அவர்களிடம் கேள்விகள் கேட்கிறார் அண்ணாச்சி. அதற்கு குழந்தைகள் கூறும் பதிலுக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் பெற்றோர்கள்.

பவர்ஸ்டார் வந்தாலும் வந்தார் எங்கும் எதிலும் பவர்ஸ்டார் மயமாகவே காட்சியளிக்கிறது. குழந்தைகளுக்கு கூட அவர் பிடித்த நடிகராகிவிட்டார்தான் ஆனால் அதற்காக ரூபாய் நோட்டில் இருப்பது கூட பவர்ஸ்டார் என்கிறது ஒரு குழந்தை. மேலே படியுங்களேன்...

காகா குரல்தான் தெரியும்...

காகா குரல்தான் தெரியும்...

இமான்: உனக்கு திருக்குறள் தெரியுமா?

குழந்தை: இல்லை எனக்கு காக்கா குரல்தான் தெரியும்!

இமான்: அது என்ன காக்கா குரல்? எங்கே சொல்லு?

குழந்தை: கா கா கா...

நமீதா மாதிரி இருப்பாங்க...

நமீதா மாதிரி இருப்பாங்க...

இமான்: உங்க அம்மா யாரு மாதிரி இருப்பாங்க?

குழந்தை: நமீதா மாதிரி இருப்பாங்க

இமான்: நமீதாவா?!

ரூபாய் நோட்டுல பவர் ஸ்டார்

ரூபாய் நோட்டுல பவர் ஸ்டார்

இமான்: நூறு ரூபாய் நோட்டுல கண்ணாடி போட்டு சிரிச்சிகிட்டு இருப்பாரே ஒருத்தர் அவர் யாரு?

குழந்தை: அது பவர் ஸ்டார்...

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு குழந்தைகளிடம் உள்ள நல்ல விஷயங்களை வெளியே கொண்டு வரலாமா அண்ணாச்சி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X