கேப்டன் டிவியில் மக்கள் பிரச்சனையைத் தீர்க்க வரும் குட்டி பத்மினி!

நடிகை லட்சுமி, நிர்மலா பெரியசாமி வரிசையில் குட்டி பத்மினியும் பொதுமக்களின் சொந்தக் கதை, சோகக் கதைகளை லைவ் ஆக கேட்டு அதற்கு தீர்வு சொல்ல முயற்சி செய்கிறார்.
சின்னத்திரையில் நெடுந்தொடர்கள் மூலம் கலைசேவை புரிந்த குட்டி பத்மினி மனதோடு பேசுங்கள் என்ற நிகழ்ச்சியின் மூலம் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
ஞாயிறுதோறும் இரவு ஒன்பது மணிக்கு 'மனதோடு பேசுங்கள்' ஒளிபரப்பாகிறது. இதில் கிரியேட்டிவ் ஹெட் மற்றும் நிகழ்ச்சி நடத்துனர் என்ற இரட்டை சுமை குட்டி பத்மினிக்கு. இந்த நிகழ்ச்சி எந்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்றடைகிறது என்பது போகப் போகத் தான் தெரியும்.
Comments


Click it and Unblock the Notifications