நடிச்சா ஹீரோயின்தான்… அக்கா, அண்ணி எல்லாம் வேண்டாம்: லைலா
சினிமாவில் ஹீரோயினாக மட்டுமே நடிக்க வேண்டும்... அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் முன்னாள் கதாநாயகியும் தற்போதைய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான லைலா.
பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணமாகி மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இரண்டு குழந்தைகளுடன் ஜாலியாக பொழுது போக்கிக் கொண்டிருந்த லைலா இப்போது டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக திரும்ப வந்திருக்கிறார்.
தமிழ் ரசிகர்கள் தன்னை இன்னமும் மறக்காமல் இருப்பது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார் லைலா.

சூப்பர் டான்சர்
நடிகை லைலா இப்போது ராஜ் டிவியில் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மறுபடியும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வந்திருக்கிறார்.

தல ஆளுடா
சென்னை விமான நிலையம் அருகே வந்த போது கார் பஞ்சர் ஆகவே காரை விட்டு இறங்கியிருக்கிறார். உடனே சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் ‘தல' ஆளுடா என்று கூறிய படியே சூழ்ந்து கொண்டார்களாம். தீனா படத்தில் அஜீத் ஜோடியாக நடித்திருந்தார் லைலா.

சிரிப்பழகி
கண்களை மூடி கன்னத்தில் குழி விழ சிரிக்கும் சிரிப்பு தமிழக ரசிகர்களை கவரவே சூப்பர் ஹிட் நடிகையானார் லைலா.

மும்பையில் செட்டில்
பரபரப்பான நடிகையாக இருக்கும் போதே திருமணமாக மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். நடிகை மாளவிகா வீடும், லைலா வீடும் ஒரே அபார்ட்மென்ட்டில் இருக்கிறதாம்.

ஹவுஸ் ஒய்ப்
மேற்கு மும்பையில் கணவர் குழந்தைகளுடன் வசித்து வரும் லைலா. ஹவுஸ் ஒய்ப் வேலை சாதாரண விசயமில்லை என்கிறார். பெரிய பையன் அனில் அம்பானி ஸ்கூலில் 4 வது படிக்கிறானாம். சிறிய பையனுக்கு 4 வயதாகிறதாம்.

தலைவா படம்
மும்பையில் தலைவா படம் பார்க்க டிக்கெட் எடுத்தும் பார்க்க முடியாமல் போய்விட்டது என்று வருத்தமாக இருக்கிறதாம்.

ஹீரோயின்தான்
அக்கா, அண்ணி கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை என்று கூறும் லைலா, குடும்பம், குழந்தைகளை கவனித்துக் கொண்டு வேலை பார்க்க சரியான இடம் டிவிதான் என்கிறார்.


Click it and Unblock the Notifications











