Lakshmi stores serial: இச்சு தா இச்சு தா.. பந்துல இச்சு தா.. ரைட்டா... ரைட்டு!

சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகாலட்சுமிக்கு வீட்டிலும் கணவனால் பிரச்சனை, வெளியிலும் மினிஸ்டர் சகுந்தலா தேவியால் பிரச்சனை. ஆனால், இரண்டையும் சமாளித்தாலும் கணவனிடம் மட்டும் எப்போதும் தோல்விதான்.

கணவன் தேவராஜ் மினிஸ்டர் சகுந்தலா தேவியின் லீகல் அட்வைசர்.அவர் சொல்லி பாதி, கணவனால் மீதி என்று மகாலட்சுமிக்கு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. என்ன பகை என்று பார்த்தால், மினிஸ்டர் எப்படியாவது மகாலட்சுமி குடும்பத்தின் லட்சுமி ஸ்டோர்ஸை அடைய வேண்டுமாம்.

அதோடு, தேவராஜின் தம்பி ரவி மீது, மினிஸ்டரின் மகள் தேஜாவுக்கு ஆசை வந்துவிட, இங்கு ரவிக்கும், பாக்கியலட்சுமிக்கும் திருட்டு கல்யாணமே நடந்து முடிந்து இருக்கிறது. இது தெரியாமல் தேவராஜ் ரவியை மிரட்டி தேஜாவுடன் நிச்சயதார்த்தமும் நடத்தி விடுகிறார்.

தேவராஜ் மகாலட்சுமி

தேவராஜ் மகாலட்சுமி

மகாலட்சுமி லட்சுமி ஸ்டோர்ஸை கவனித்துக் கொள்ள, தேவராஜ் பெரிய லாயராக வலம் வருகிறார். இவரின் ஒரு தம்பி ரவியால்தான் இப்போது வீட்டில் பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆனால், மகாலட்சுமிக்கு பர்சனலாக கணவனாலும் பிரச்சனை. சியாமளா என்று ஒரு பெண் அடிக்கடி போன் செய்வதும், அவளின் போன் கால் வந்தால் கணவர் போனை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடுவதும் என்று இருக்க, மகாலட்சுமிக்கு சந்தேகம் வந்தாலும் கேட்க முடியாத நிலை. அப்படியே கேட்டாலும் கணவரிடம் இருந்து மவுனம் மட்டுமே பதிலாக வருகிறது.

பஞ்சு மிட்டாய் பட்டர் பிஸ்கட்

பஞ்சு மிட்டாய் பட்டர் பிஸ்கட்

ரவி பஞ்சு மிட்டாய் என்று ஆசையாக கூப்பிடும், பாக்கிய லட்சுமிக்கும், பாக்கிய லட்சுமி பட்டர் பிஸ்கட் என்று ஆசையாக கூப்பிடும் ரவியும் ரகசிய கல்யாணம் செய்துக்கறாங்க. ஆனால், தேஜாவுடன் நிச்சயதார்த்தம் ஆகிவிடுகிறது. ரவியை நெருங்கினால் ரவியை கொன்று விடுவோம் என்று மினிஸ்டரும் அவரின் தம்பியும் மிரட்டியதால் பாக்கியலட்சுமி ரவியிடம் பேசுவதைத் தவிர்க்கிறாள். இது தெரியாத ரவி, பாக்கியலட்சுமி பேசவில்லை என்று தற்கொலை செய்துக்கும் முடிவுக்கு வந்துடறான்.

பஞ்சு பட்டர்

பஞ்சு பட்டர்

பீச்சில் ரவி பாக்கியலட்சுமி சொல்லிய நேரத்தில் வரவில்லை என்று கடலில் குதித்து விடுகிறான். அங்கு இருந்த ஆட்கள் ரவியைத் தூக்கி காப்பாற்றிட, அப்போதுதான் தான் பேசாமல் இருந்ததற்கான காரணத்தை சொல்கிறாள். இனிமேல் இந்த பஞ்சு மிட்டாய் எனக்குத்தான் என்று ரவி கட்டிக்கொள்ள, இனிமேல் இந்த பட்டர் பிஸ்கட் எனக்குத்தான் என்று பாக்கிய லட்சுமியும் ரவியைக் கட்டிக்கொள்கிறாள்.

சைவ முத்தம்

சைவ முத்தம்

நம்மை பிரிக்க யாராலும் முடியாதபடி இருவரும் பதிவுத் திருமணம் செய்துக்கலாம் என்று ரவி சொல்ல, பாக்கிய லட்சுமியும் சம்மதம் சொல்றா. அதற்கு முந்தைய நாள் இரவு சந்தோஷத்தில் ரவி பாக்கிய லட்சுமியுடன் டூயட் பாடி கனவு காணுகிறான். அவளின் கண்கள், நெற்றி, கன்னங்கள் என்று முத்தமிட்டுவிட்டு இதழ்களை விட்டு விடுகிறான். பாக்கிய லட்சுமி ரவிக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டு பந்தில் தனது லிப்ஸ்டிக் இதழ்களைப்பதித்து முத்தமிட்டு, அவனிடம் வீசுகிறாள். அதை கேட்ச் பிடித்த ரவி, பாக்கிய லட்சுமியின் இதழ்கள் பதித்த இடத்தில் தனது இதழ்களை பதித்து இச்சு கொடுக்கிறான்.

இது சைவ முத்தம் போலத்தானே இருக்கிறது.. தவறு ஒன்றும் இல்லைதானே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X