டிவி நிகழ்ச்சியில் தாலியை கழற்றி எறிந்த பெண்… அதிர்ச்சியடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பெண் தன் கணவருடன் தன் உடன் பிறந்த சகோதரியே தொடர்ப்பு வைத்திருப்பதாக புகார் கூறினார். அது மட்டுமில்லாது கணவன் கட்டிய தாலியை கழற்றி சகோதரியின் மீது வீசி எறிந்தால் அந்தப் பெண். இது சினிமாவிலோ சீரியலிலோ வந்த காட்சி அல்ல. 'சொல்வதெல்லாம் உண்மை' ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற பெண்தான் இவ்வாறு அதிர்ச்சிகரமான செயலை செய்தார்.
இதைக்கண்ட உடன் இந்த நிகழ்ச்சியை நடத்திய தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் அதிர்ச்சியில் உறைந்துபோனார்.
ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சொல்லதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கி வந்தார். என்னகாரணமோ தெரியவில்லை இப்போது அவருக்குப் பதிலாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்தமாதிரியான கதைகளைக் கேட்டு அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். அப்படி என்னதான் நடந்தது. மேலே படியுங்களேன்.

என் அக்கா மோசம்
வள்ளி என்ற பெண் நிகழ்ச்சியில் பேச வந்தார். தனக்கு 13 வயதில் திருமணம் நடந்ததாகவும். தான் கர்ப்பமான உடன் தன்னை கவனிக்க வந்த அக்கா உடன் தனது கணவருக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும் புகார் கூறினார். சகோதரியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அதை சாதகமாக்கிக் கொண்டு தன் கணவரும் தன்னுடைய அக்காவும் குடும்பம் நடத்துவதாகவும் தெரிவித்தார் அந்தப் பெண்.

அது உண்மைதானுங்க…
இந்த பெண் கூறியது எந்த அளவிற்கு உண்மை என்பதை அறிய வள்ளியின் அக்கா செல்வியை நிகழ்ச்சிக்கு அழைத்தனர். அந்தப் பெண்ணோ கொஞ்சம் கூட வெட்கப்படாமல், தங்கையின் கணவருடன் தனக்கு தொடர்பு இருப்பது உண்மைதான் என்று கூறினார். அறியாத வயதில் தெரியாமல் தவறு ஏற்பட்டுவிட்டது என்றும் கூறினார்.

கணவரிடம் போக மாட்டேன்
இதற்கிடையே செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருந்து வரவே அவருடன் போகாமல் தங்கையின் கணவருடனே செட்டிலாகிவிட்டார் செல்வி. இதில் ஏற்பட்ட மனக்கசப்பில் வள்ளி வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.

நான் செத்துப் போகவா?
தன்னுடைய கணவர் மோசமானவர் என்று கூறிய செல்வி, தன்னுடைய அக்காவுடன் தனது கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும்,( அடப்பாவிகளா) அதனால் அவனுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்றும் கூறினார்.

தலையில் கைவைத்த லட்சுமி ராமகிருஷ்ணன்
இந்த வசனங்களைக் கேட்ட உடன் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். அப்புறம் என்னதான் ஆச்சு என்பதை அறிய செல்வியின் கணவரை நிகழ்ச்சிக்கு கூப்பிட்டனர்.

நான் வச்சு வாழறேன்
நிகழ்ச்சிக்கு வந்த செல்வியின் கணவர், தான் செல்வியுடன் வாழ விரும்புவதாக கூறினார். ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாத செல்வி தன்னுடைய தங்கை வள்ளியின் மீதும், அக்காவின் மீதும் தவறான புகார் கூறுவதிலேயே குறியாக இருந்தார்.

தாலியை எறிந்த வள்ளி
இதைக் கேட்ட வள்ளி கோபத்துடன் செல்வியை சத்தம் போட்டார். இருவரும் மாறி மாறி சண்டை போட்டனர். ஒரு கட்டத்தில் திடீரென்று வள்ளி தன்னுடைய தாலியை கழற்றி எறிந்தார். இதைக்கண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்தார். தாலியின் புனிதம் உனக்கு தெரியாமல் இருக்கலாம். நிறைய பேருக்கு அது தெரியும் என்று கூறவே கீழே விழுந்த தாலியை அந்த எடுத்து கையில் வைத்துக்கொண்டார் வள்ளி.

தீர்ப்பு சொன்ன லட்சுமி
கடைசியில் இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ன வெனில் செல்வி தனது கணவருடன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டுமே வள்ளி அவளுடைய கணவருடன் வாழ முடியும். செல்வி தெரிந்து தப்பு செய்கிறார் எனவே இதற்கு தீர்வு செல்வியின் கையில்தான் இருக்கிறது என்று கூறி பஞ்சாயத்தை ஒரு வழியாக முடித்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

நிர்மலா பெரியசாமி எங்கே?
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை நடத்திய நிர்மலா பெரியசாமி திடீரென்று அந்த நிகழ்ச்சியை விட்டு விலக காரணம் எதுவும் தெரியவில்லை. ஆனால் அவர் அளவிற்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்து இல்லை என்றே பெரும்பாலான ரசிகர்கள் எழுதி வருகின்றனராம். மூன்று எபிசோடுதானே முடிந்திருக்கிறது பார்க்கலாம். லட்சுமி ராமகிருஷ்ணன் பஞ்சாயத்தில் ஜெயிக்கிறாரா? இல்லை மறுபடியும் நிர்மலாவே வருவாரா என்று.


Click it and Unblock the Notifications











