Lakshmi stores serial: காதலும் வேணும் பாசமும் வேணுமா? என்னடா தம்பி சொல்றே?

சென்னை: சன் டிவியின் லட்சமி ஸ்டோர்ஸ் சீரியலில் பாக்கிய லட்சுமியும், ரவியும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்துக்க முடியாதபடி பல சம்பவங்கள் நடந்து முடிந்துவிட்டது.

ரவியும், பாக்கிய லட்சுமியும் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்க போறாங்க.இதை தெரிஞ்சுக்கிட்ட தேவராஜ், தாத்தாவுக்கு பரிந்து பேச வந்த பாக்கிய லட்சுமியை தள்ளி விட்டுடறார்.

இதைப் பார்த்த பாக்கிய லட்சுமி தங்கை புனிதா, தேவராஜை எதிர்த்துப் பேச, அவர் அவளை அடிக்கப் போகிறார்.அது தவறி பாக்கியலட்சுமியின் தாத்தா கன்னத்தில் பட்டுடுது. இதை பார்த்த பாக்கிய லட்சுமி தேவராஜை அடித்து விடுகிறாள்.

காதலர்கள் தவிப்பு தொடருது

காதலர்கள் தவிப்பு தொடருது

பாக்கியலட்சுமி தனது அண்ணன் தேவராஜை அடித்ததைப் பார்த்த ரவிக்கு கோவம் உச்சத்துக்கு போகுது.என்ன காரியம் செய்துட்டே லட்சுமின்னு சொல்லிட்டு, அண்ணனுடன் சென்று விடுகிறான். க்ளையண்ம் நின்னு போகுது. ஆனால், காதலர்கள் தவிப்பு இன்னமும் தொடருது. பாக்கிய லட்சுமியை மறக்கவும் முடியலை, அவள் தனது அண்ணனை அடித்ததை ஏத்துக்கவும் முடியலை ரவிக்கு. அதற்குள் மினிஸ்டரின் மகள் தேஜாவுடன் கல்யாண ஏற்பாடுகள் நடக்க இருக்குது.

ரவிக்கும் பாக்கிய லட்சுமிக்கும்

ரவிக்கும் பாக்கிய லட்சுமிக்கும்

பீச்சில் ஏற்கனவே ரவுடிகளின் கட்டாயத்தால் பாக்கிய லட்சுமிக்கும், ரவிக்கும் கல்யாணம் ஆகிறது. அதாவது ரவி பாக்கிய லட்சுமி கழுத்தில் வெறும் மஞ்சள் கயிறு கட்டிடறான். இது அவளது தங்கைக்கும், தாத்தாவுக்கு மட்டுமே திரியும். மகாக்காவுக்கு தெரியும்னு தங்கச்சி பொய் சொல்லி, தாத்தாவை சமாதனப் படுத்தியதில்தான், ரிஜிஸ்டர் ஆஃபீசில் அத்தனை பெரிய சம்பவம் நடந்துருது. ரிஜிஸ்டர் கல்யாணம் செய்துக்க போயி திரும்பி வந்தது பாக்கியலட்சுமி அண்ணிக்கும், அண்ணனுக்கும் கூட தெரிஞ்சுருது.ஆனால், திருட்டு கல்யாணம் செய்துக்கிட்டது தெரியாது.

அடுக்கடுக்கா பொய்

அடுக்கடுக்கா பொய்

அக்கா தெரியாத்தனமா தாத்தாகிட்ட ஒரு பொய் சொல்லிட்டேன். அந்த பொய்யினால் நான் படும் அவஸ்தைகள் ரொம்ப அக்கான்னு தங்கை சொல்ல, ஒரு பொய் இல்லை புனிதா... அடுக்கடுக்கா பொய் சொல்லி இருக்கோம்னு சொல்றா பாக்கிய லட்சுமி.என்னக்கா சொல்றேன்னு கேட்க, ஆமாம் புனிதா,அன்னிக்கு தேவராஜ் சார்கிட்ட மன்னிப்பு கேட்க போனேனே அவர் மன்னிச்சுட்டாரான்னு தாத்தா கேட்டார். அப்போ மன்னிச்சுட்டார்னு அவர் மனசு கஷ்டப்பட கூடாதுன்னு பொய் சொல்லிட்டேன்னு பாக்கிய லட்சுமி சொல்றா.

இப்போதுதான் ரவி

இப்போதுதான் ரவி

ரவியிடம் பேச பாக்கிய லட்சுமியும், தங்கச்சியும் போறாங்க. அவன் பேச மறுக்கிறான்.அப்போது ரவி என்னை என்ன பண்ண சொல்றே புனிதா...உங்க அக்கா அவசரத்தில் செய்த காரியத்தால் எத்தனை பிரச்சனை தெரியுமா? எனக்கு பாசமும் வேணும், காதலும் வேணும்.. நான்தான் இப்போ தவிக்கிறேன்னு சொல்றான் ரவி. அப்போது பாக்கிய லட்சுமி இந்த கைதானே உங்க அண்ணனை அடிச்சுதுன்னு சொல்லி, தனது உள்ளங்கையில் ஸ்டெம்பில் குத்திக்கறா. ரத்தம் வருது.

இத்தனை சம்பவங்கள் நடந்த பிறகும் காதல்தான் ஜெயிக்குது பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X