twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Lakshmi stores serial: என்னது இவங்க வித்தியாசமான மினிஸ்டரா இருக்காங்க...!

    |

    சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல், எத்தனை கதா பாத்திரங்களை முன்னிறுத்தி கதையை கொண்டு போனாலும், எத்தனையோ முரண்பாடுகள் இருப்பதை உண்மையா சகிச்சுக்க முடியலை.

    மத்திய மினிஸ்டர் சகுந்தலா தேவிக்கு சொந்தமான சாக்லேட் தயாரிக்கும் கம்பெனியில் முறை கேடுகள் நடந்து இருப்பதை மகா லட்சுமி கண்டு பிடித்து ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைக்கறாங்க.

    மத்திய மினிஸ்டரை லோக்கல் போலீசார் அரெஸ்ட் பண்ண முடியுமா? ஆனால், லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் அது சாத்தியமாகிறது.பின்னர் வெளியில் வந்துடறாங்க.அது வேற விஷயம்.

    மத்திய மினிஸ்டர்

    மத்திய மினிஸ்டர்

    நடிகை சுதா சந்திரன்தான் மத்திய இணை அமைச்சரா நடிச்சு இருக்காங்க.முதலில் கெட்டப் சரி இல்லைங்க. எதை வேணும்னாலும் எடுத்து கழுத்தில் ஃபேஷன் என்று மாட்டிக் கொள்கிற எல்லா சீரியல் கதாபாத்திரங்களிலும் வரும் பணக்கார பெண்மணி போல இருக்கார். கொஞ்சம் கெட்டப்பை மாற்றி அமைக்க முயற்சித்து இருந்தால், மினிஸ்டருக்கு உண்டான கெத்து இருந்திருக்கும்.

    கழியதையும் கண்டதையும்

    கழியதையும் கண்டதையும்

    கழிப்பதை எல்லாம் உபயோகமான பொருட்களாக மாற்றும் யுக்தி தற்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது .இதை சுதா சந்திரன் மிக நன்றாகவே பயன் படுத்துகிறார். வெறும் ரிப்பன் வயிறு வரை தொங்கும் நெக்ளெஸை அணிந்து வருகிறார்.இது போல பல சொல்லலாம்.அதுவும் இவர் ஜீ தமிழ் டிவியில் டான்ஸ் நிகழ்ச்சிக்கு ஜட்ஜா வரும் போதும் இவரை இப்படியே பார்க்கிறோம்.

    மினிஸ்டர் கேரக்டர்

    மினிஸ்டர் கேரக்டர்

    இதே மாதிரி கெட்டப்பில் மத்திய இணை அமைச்சர் கதா பாத்திரத்திலும் வருகிறார்.ஏற்கனவே மினிஸ்டருக்கு உண்டான காட்சிகள் இந்த சீரியலில் ஒத்துப் போகாமலே இருக்கிறது. இந்த நிலையில் இது போன்ற கெட்டப் போராடிக்குது. இதைக் கொஞ்சம் மாத்தி இருக்கலாம்.அதுக்காக போட் நெக், முக்கால் கை வச்ச ஜாக்கெட் போட்டுக்கிட்டு, காட்டன் புடவை கட்டிக்கிட்டு எளிமையா வாங்கன்னு சொல்லலை. யோசிக்கணும், தோற்றத்தில் எதாவது மாற்றம் கொண்டு வர.

    கெட்டப்பை மாத்துங்க

    கெட்டப்பை மாத்துங்க

    நிஜமா லட்சுமி ஸ்டோர்ஸ் கதை ஓட்டை உடைசல்தான்.அதிலும் மத்திய மினிஸ்டரை இவ்வளவு டேமேஜ் பண்றாங்க. அதை பார்த்து மக்களுக்கு கோவம் வர வேணாமா.அது வராத மாதிரி கதையோட்டம்தான் இருக்கு.என்ன செய்ய, சுதா சந்திரன் மேடம் கொஞ்சம் கெட்டப்பை மாத்துங்க.கதையின் செட்டப் தானா மாறுதா பார்ப்போம்.

    English summary
    Sun TV's Lakshmi Stores serial, the story of how many characters are brought to the story, but the fact that there are many contradictions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X