twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நந்தினியைப் பற்றிய உண்மை தெரிஞ்சு போயிருமோ? பதை பதைக்கும் இல்லத்தரசிகள்!…

    By Mayura Akilan
    |

    நாட்டாமை நாச்சிமுத்து குடும்பத்தில் அவரது மகன் வெற்றிவேல் மனைவி லட்சுமியாக நடிக்க வந்திருக்கும் நந்தினி... நிஜ மருமகளைப் போல குடும்பத்தில் பாசம் காட்டுகிறாள். இப்படி ஒரு மருமகள் நமக்கு கிடைக்க மாட்டாளா? என்று ஏங்க வைக்கிறார் ‘லட்சுமி வந்தாச்சு' தொடரின் நாயகி நந்தினி. இல்லத்தரசிகளின் உள்ளங்களைக் கொண்ட லட்சுமியாக வலம் வருகிறாளாம். மிகப்பெரிய ஹிட் தொடராக மாறியுள்ள இந்த தொடர் 100 எபிசோடுகளைத் தாண்டி பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

    பெற்றோர்கள் இல்லாமல் சித்தி சித்தப்பாவின் ஆதரவில் வளரும் அழகான பெண் நந்தின். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நந்தினி, மணமேடை ஏறும் நேரத்தில் கூட திருமணத்தை ஒத்தி வைத்து விட்டு ரத்ததானம் செய்யப்போகிறாள். அப்போதுதான் பணத்திற்காக நோய் உள்ள ஒருவனுக்கு தன்னை திருமணம் செய்து கொடுக்கப் போகிறார்கள் என்ற தகவல் தெரியவே, மணக்கோலத்தில் தன்னை காதலித்த சக்தியைத் தேடி போகிறாள். ஆனால் சக்தியோ, அவளை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுகிறான்.

    கால் போன போக்கில் போகும் நந்தினி, தற்கொலை செய்து கொள்ளப்போகும் வெற்றி வேலை காப்பாற்றுகிறாள்.

    தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் எடுத்துக்கூறி, தன்னுடைய மனைவி லட்சுமியாக நடிக்க வேண்டும் என்று நந்தினியிடம் கூறுகிறான். அதற்கு நந்தினியும் சம்மதிக்கிறாள்.

    மனநலம் சரியில்லாமல் இருக்கும் மாமியாரை கவனித்துக்கொள்கிறாள் லட்சுமியாக நடிக்கும் நந்தினி. திருமணம் இல்லாமல் இருக்கும் மூத்தவர் தங்கவேலுக்கு தேன்மொழியை திருமணம் செய்து வைக்கிறாள்.

    தோன்மொழியின் வன்மம்

    தோன்மொழியின் வன்மம்

    ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நாட்டாமை நாச்சிமுத்துவின் குடும்பத்தில் தங்கவேலுவின் மனைவி தேன்மொழியின் வரவால் புயல் வீசுகிறது. தன் புருஷன் தான் இந்த வீட்டிற்கு மூத்த பிள்ளை, ஆதலால் தனக்குத் தான் சாவிக் கொத்துவின் மீது அதிகாரம் என்று கேட்க அதற்கு நாச்சிமுத்து திட்டவட்டமாக மறுத்து விடுகிறார்.

    தேன்மொழியின் நடிப்பு

    தேன்மொழியின் நடிப்பு

    இது தேன்மொழிக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் தேன்மொழியின் திருவிளையாடல்களை நம்பும் தங்கவேல், தன் அன்புத் தம்பியான வெற்றிவேலை கண்டிக்க, லட்சுமியாக நடிக்கும் நந்தினி இதைக் கண்டு பெரிதும் வருந்துகிறாள். இருப்பினும் வள்ளியம்மையை குணப்படுத்தும் தன் முயற்சியில் இருந்து நந்தினி சற்றும் தளரவில்லை.

    லட்சுமியின் எண்ணம்

    லட்சுமியின் எண்ணம்

    வெற்றிவேல்தான், தன் எதிர்கால கணவன் என்ற கனவில் வாழ்ந்து வந்த உண்மையான லட்சுமி, தங்கை மோகாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மைனரை திருமணம் செய்ய முடிவு செய்து, திருமண பத்திரிகையின் முதல் பிரதியை வேண்டுமென்றே வெற்றிவேல், நந்தினி இருவரை தெருவில் வழி மறித்து கொடுக்கிறாள்.

    நின்று போன திருமணம்

    நின்று போன திருமணம்

    இது வெற்றிவேலுவிற்கு பெரிதும் மன உளைச்சளை அளிக்கின்றது. லட்சுமி, மைனர் திருமணத்தை ஒருவழியாக நிறுத்தி விடுகிறாள் நந்தினி. இதனால் வெற்றிவேல் மனம் மகிழ்கிறான். கோவிலில் மகிழ்ச்சியோடு இறைவனுக்கு நன்றி சொல்கிறான்.

    வெற்றிவேலின் ஆதரவு

    வெற்றிவேலின் ஆதரவு

    இதற்கிடையில் எப்போதெல்லாம் தேன்மொழியும் அண்ணன் தங்கவேலுவும், நந்தினி பற்றி அவதூறு பேசுகிறார்களோ அப்போதெல்லாம் வெற்றிவேல், நந்தினிக்கு ஆதரவாக இருக்க, இது நந்தினியின் மனதை நெருடச் செய்கிறது.

    சக்திவேலின் காதலி

    சக்திவேலின் காதலி

    நந்தினி காதலித்த சக்திவேல்தான் வெற்றிவேலின் உடன் பிறந்த அண்ணன் என்பதுதான் கதையின் முக்கிய திருப்பம். இந்த நிலையில் நந்தினியைப் பற்றிய உண்மைகளையும் வெற்றிவேலுக்கும் நந்தினிக்கும் திருமணம் நடக்கவில்லை. லட்சுமியாக நடிக்கத்தான் வந்திருக்கிறாள் என்பதை வீடியோவாக பதிவு செய்து அதை நாச்சிமுத்துவின் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான்.

    சக்திவேல் வருவானா?

    சக்திவேல் வருவானா?

    இதனிடையே சக்திவேல் பற்றி தனக்கு தெரியும் என்று நந்தினி கூற தங்கவேலுவின் திருமணத்திற்கு சக்திவேல் வந்தது பற்றியும், கூறுகிறாள் நந்தினி. அவனுடன் பேசவேண்டும் என்று சக்திவேலின் தோழி அனுஷ்காவை தொடர்பு கொள்கின்றனர். ஆனால் அனுஷ்காவோ போனை எடுக்காமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுகிறாள்.

    லட்சுமியின் முடிவு

    லட்சுமியின் முடிவு

    அதேநேரத்தில் கோவிலுக்கு வந்த வெற்றிவேல் நந்தினியைப் பார்த்து தவறாகப் பேசுகிறாள் லட்சுமி. தன்னால் ஒருபோதும் வெற்றிவேலை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி மறுத்துவிடுகிறாள். ஆனால் தன்னுடைய தங்கைகளின் வாழ்விற்காகவும், வெற்றிவேலின் அம்மாவிற்காகவும்தான் கோபமாக பேசியதாக கூறி சாமியிடம் மன்னிப்பு கேட்கிறாள்.

    அடுத்தது என்ன?

    அடுத்தது என்ன?

    தேன்மொழியின் அடுத்த அதிரடி திட்டம் என்ன ? சாவிக்கொத்தை கைப்பற்றி விட்டாளா? நந்தினியைப் பற்றிய உண்மை தெரிந்து விடுமா? உண்மையான லட்சுமியை வெற்றிவேல் திருமணம் செய்து கொள்வானா? சக்திவேல் நந்தினியை சந்திப்பானா? ஆகிய பரபரப்பான திருப்பங்களை இனி வரும் எபிசோடுகளில் காணலாம் என்கிறார் தொடரின் இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா. ஜீ தமிழ் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு காணலாம் ‘லட்சுமி வந்தாச்சு'.

    English summary
    A new serial that is making waves in the town is Lakshmi Vanthachu. The story tracks the lives and loves of the close-knit Nattamai Nachimuthu family. With lot of engrossing and twisting plots “Lakshmi Vanthachu” Monday to Friday at 9:30 Pm in your ZEE TAMIL Channel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X