சமந்தா, மீனா, சினேகாவின் தோழி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்களா? யார் அந்த பிரிட்டன் தொழிலதிபர்?
சென்னை: கமல்ஹாசன் தொகுத்து வழங்க பிக் பாஸ் சீசன் 5 வரும் அக்டோபர் 3ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
அதற்கான அதிகாரப்பூர்வ புரமோவும் சமீபத்தில் வெளியாகி வேற லெவலில் வைரலானது.
பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் இந்த முறை வேற லெவலில் ரசிகர்களை எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றன. இந்நிலையில், பிரிட்டன் பெண் தொழிலதிபர் ஒருவரும் பிக் பாஸுக்கு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கன்ஃபார்ம்
பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 3ம் தேதி தான் என ஏற்கனவே நாம் கணித்தது போலவே அதே நாள் தான் நிகழ்ச்சி ஒளிபரப்பாக போகிறது என்பதை அதிகாரப்பூர்வமாக புரமோ ஒன்றை வெளியிட்டு விஜய் டிவி கன்ஃபார்ம் செய்துள்ளது. ரசிகர்களுக்கு இந்த ஆண்டு ஏகப்பட்ட என்டர்டெயின் மென்ட்டுகள் வரிசைக் கட்டி காத்திருக்கும் நிலையில், எதை பார்ப்பது எதை விடுவது என்கிற குழப்பத்தில் உள்ளனர்.

உத்தேச பட்டியல்
இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப் போகிறார்கள் என்கிற உத்தேச பட்டியலில் சில போட்டியாளர்கள் கன்ஃபார்ம் லிஸ்ட்டுக்கே சென்றுள்ளனர். அப்படி கன்ஃபார்ம் லிஸ்டில் ஷகீலாவின் மகள் மிலா, பிரியங்கா, குக் வித் கோமாளி சீசன் 2 வின்னர் கனி, ஜிபி முத்து, நமீதா மாரிமுத்து, பிரியா ராமன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்றுள்ளன. நிகழ்ச்சி தொடங்கினால் தான் இதில் யாரெல்லாம் இடம்பெற்றுள்ளார்கள் என்பது உறுதியாகும்.

பிரிட்டன் பெண் தொழிலதிபர்
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5ல் பிரிட்டன் பெண் தொழிலதிபர் ஒருவர் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறார் என்கிற ஹாட்டான தகவல்களும் வெளியாகி உள்ளன. யார் அந்த பிரிட்டன் தொழிலதிபர் என்று பார்த்தால் பிரிட்டனில் சில ஆண்டுகள் பணியாற்றி விட்டு தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக Lash Studio-வை ஆரம்பித்த அழகு கலை நிபுணர் ரேணுகா பிரவீன் தான் அது என்பது தெரியவந்துள்ளது.

சமந்தா, மீனா, சினேகாவின் தோழி
தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக ஐ லாஷ்களுக்கான அழகு நிலையத்தை ஆரம்பித்த ரேணுகா பிரவீன் அழகு நிலையத்தில் தான் பிரபல நடிகைகளான சமந்தா, மீனா மற்றும் சினேகா உள்ளிட்ட பல பிரபலங்கள் ரெகுலர் கஸ்டமர்களாகவும் உள்ளனர். மேலும், அவர்கள் ரேணுகாவின் நெருங்கிய தோழிகளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் தான் டாப்
போன சீசனை போல இந்த முறையும் பல பெண் போட்டியாளர்கள் பெயர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிபட்டு வரும் நிலையில், அவர்களின் புரொபைல்கள் எல்லாமே வித்தியாசமாக உள்ளதால் இந்த சீசன் நிச்சயம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் ஒரு இளம் நடிகை கலந்து கொள்வாரே அப்படி இந்த் முறை யார் கலந்து கொள்ளப் போகிறார் என்பது மட்டும் ரொம்பவே சஸ்பென்ஸாக பிக் பாஸ் டீம் வைத்துள்ளனர்.

சர்ச்சைகள் வெடிக்கும்
பிக் பாஸ் சீசன் 3க்கு நிகராக இந்த முறை போட்டியாளர்களின் தேர்வு இருப்பதாகவும் கடந்த சீசனை போல இல்லாமல் அதிகளவில் சர்ச்சைகளை வெடிக்க வைத்து டி.ஆர்.பியை ஏற்ற பிக் பாஸ் தமிழ் டீம் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெறும் நடிகர்கள் மட்டுமின்றி இது போன்ற சாமானியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் நிச்சயம் ரசிகர்களின் கவனம் பிக்பாஸ் சீசன் 5 பக்கம் திரும்பும் என்பதையும் விஜய் டிவி உறுதியாக நம்புகிறது.


Click it and Unblock the Notifications