வந்துச்சா.. வந்துச்சா.. கவின் மீது லாஸ்லியாவுக்கு காதல் வந்துச்சா?!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவுக்கு கவின் மீது காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
விஜய் டிவியில் கடந்த 23ஆம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் ஃபாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து எஞ்சியுள்ள 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் ஆட்டத்தை காட்டி வருகின்றனர்.

கடந்த வாரம் சாக்ஷி
பிக்பாஸ் வீட்டில் உள்ள கவின் எப்போதும் பெண் போட்டியாளர்கள் பின்னாடியே சுற்றி வருகிறார். யாரை காதலிக்கிறோம் என்ற குழப்பத்தில் இருந்த கவின் ஒரு வழியாக கடந்த வாரம் சாக்ஷியை காதலிப்பதாக கூறி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அண்ணன் என அழைக்காதே
ஆனாலும் அவரால் அதனை சீரியஸாக செய்யவும் முடியவில்லை. சாக்ஷிக்கு உண்மையான காதலனாக இருக்கவும் முடியவில்லை. தொடர்ந்து லாஸ்லியா பின்னால் சுற்றி வந்தார்.
அவரிடம் தன்னை அண்ணன் என அழைக்கக்கூடாது, அண்ணன் என அழைத்தால் காண்டு ஆகி விடுவேன் என்றார்.

சாக்ஷி சண்டை
லாஸ்லியாவிடம் ரொம்பவும் நெருக்கம் காட்டினார். இதனால் சந்தேகமடைந்த சாக்ஷி உனக்கு லாஸ்லியாவுடன் பேசுவதுதான் முக்கியமா என கேட்டு சண்டை போட்டார். இதனால் அப்செட்டில் இருந்தார் கவின்.

லாஸ்லியாவிடம் மாற்றம்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக லாஸ்லியாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறது. கவின் மீது ஓவர் பொஸஸிவுடன் நடந்து கொள்கிறார். உனக்கு என்ன வேண்டும் என கவின் கேட்டபோது கூட எனக்கு ஒன்றும் வேண்டாம் எனக் கூறி எதுவும் பேசாமல் அமைதியாக உட்காந்திருந்தார்.

கோபமான சாக்ஷி
நேற்றைய எபிசோடிலும் கவினை தனது தட்டில் சாப்பிட அனுமதித்தார் லாஸ்லியா. இதனால் டென்ஷனான சாக்ஷி கோபமடைந்தார். இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை நடப்பது புரமோவில் காட்டப்பட்டது. ஆனால் நிகழ்ச்சியில் காட்டப்படவில்லை.

சிறைக்கு கிளம்பிய லாஸ்லியா
பின்னர் பிக்பாஸ் விளையாட்டில் கவின் சிறைக்கு செல்ல தயாரான போது தானும் செல்வதாக கூறி கிளம்பினார் லாஸ்லியா. ஆனால் அதற்கு ஹவுஸ்மேட்ஸ் ஒப்புக்கொள்ளாததால் மூடு அவுட் ஆனார்.

கவினிடம் கண்ணீர்விட்ட லாஸ்லியா
இருப்பினும் பாத்ரூமில் கவினிடம் இனி என்னுடன் கதைக்காதே என கூறி கண்ணீர் விடுகிறார் லாஸ்லியா. இதைத்தொடர்ந்து பேசிய கவின், நான் எல்லோரிடமும் இப்படிதான் பழகி வருகிறேன். நீ சீரியஸாக எடுத்துக்கொண்டாய். எல்லாவற்றுக்கும் காரணம் நான்தான்.

லாஸ்லியாவுக்கு அட்வைஸ்
உனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதனை கெடுத்துக்கொள்ளாதே என லாஸ்லியாவுக்கு அட்வைஸ் செய்கிறார் கவின். இதன் மூலம் லாஸ்லியா கவினிடம் காதலில் விழுந்துவிட்டார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ரசிகர்கள் கவலை
லாஸ்லியா இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் நேர்மையாக விளையாடி வருகிறார். அவருக்கு பிக்பாஸ் வீட்டிலும் பொதுமக்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அழகு பதுமையாகவும் பிக்பாஸ் வீட்டின் செல்லப்பிள்ளையாகவும் உள்ள லாஸ்லியா கவினுடன் காதலில் விழுந்தது அவரது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











