Bigg boss 3 tamil: 2 நாள் வாக்குகளில் பின் தங்கி பரிதாபமாக வெளியேறிய மீரா!
Recommended Video
சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி, சீசன் ஒன்று போலவே, ஹவுஸ் மேட்ஸ் காமிரா கான்ஷியஸ் இல்லாமல் நிஜ முகத்துடன்,பிக் பாஸ் ஹவுசில் வளைய வருகிறார்கள்.
விஜய் டிவியின் இந்த நிகழ்ச்சி, மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிஞ்சுக்க எல்லாருக்கும் ஆர்வம் இருக்கு. அது போலத்தான் மக்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, நிகழ்ச்சி வெற்றி நடைபோட்டு கொண்டு இருக்கிறது.
ஆனால், இப்போது மக்களுக்கு தங்கள் வீட்டில் என்ன நடக்கிறது நின்று அவதானித்து பார்க்க நேரமில்லை என்பதுதான் உண்மை. என்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை மட்டும் தவறாமல் பார்க்கிறார்கள்.இதற்கு நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் காரணம் என்று சொல்லலாம்.

டச்சிங் டச்சிங்
நம்மவர் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இந்த சீசனில் ரொம்ப கருத்துக்கள் சொல்லவோ, மக்களின் உரிமை பற்றி பேசவோ அதிக இடமில்லை. ரொம்ப எதிர்பார்த்து கொண்டு இருக்கும் போது, சும்மா டச் பண்ணிட்டு வந்துடறார். நேற்று முன் தினம் மீராவுக்கு குறும் படம் போட்டு காண்பித்தும், அவர் பிடித்த பிடியில் நிற்க, நேற்று கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்... தீர விசாரிப்பதே மெய்னு சொல்லியும், மீரா பிடித்த பிடியில் நிற்கிறார்னு சொன்னார்.

புனைந்தது என்று
அப்போ இதை நியூஸ்ல போட்டாலும் புனைந்தது என்று சொல்வார்களோன்னு லேசா செய்திகள் பற்றி டச் பண்ணிட்டு வந்துட்டார். ஒரே கைத்தட்டல்...என்னை மாட்டி விட்டுடாதீங்கன்னு சுவை பட சொன்னார். இப்படி கிடைக்கும் சில நேர துளிகளில் மட்டும் கமல் கருத்துக்களை உதிர்த்து விட்டுப்போறார்.இது கூட நல்லாத்தான் இருக்கு. அவர் ஏதாவது பேசப்போக பேசறதே புரியலைன்னு டேக் இட் ஈஸி போல மக்கள் கருத்து சொல்லிவிட்டு சென்று விடுவார்கள்.

மீராவுக்கு இல்லை ஓட்டுக்கள்
கடைசி இரண்டு நாட்கள் வரை வாக்குக்களில் சாக்ஷியே பின்தங்கி கடைசி நிலையில் இருந்தார். மீரா எப்போது சேரனை இடுப்பு பிரச்சனையில் குறை கூறினாரோ, அப்போது அவரின் பெயர் கடைசி நிலைக்கு வந்து, வாக்குகள் சரியத் துவங்கின.அதுவரை கடைசி இடத்தில் இருந்த ஷாக்ஷி முன்னேறி போய்விட்டார். இதில் மீரா சாபப்பட்ட பெண் என்று சொல்வதா, பாவப்பட்ட பெண் என்று சொல்வதா?

லூசு மாதிரி நடிக்கிறியா
மீரா கடைசி நேரத்தில் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை. சாக்ஷி மீட்டிங் அரேன்ஞ் செய்துவிட்டு, நீ கேட்டே நான் செய்தேன்னு ஷாக்ஷி சொல்லி, நீ லூசா லூசு மாதிரி நடிக்கிறியான்னு கேட்டும் கூட ,மீரா அதை பெரிது படுத்தவில்லை. சிறையில் சாக்ஷியுடன் மீரா இருந்த போது, சாக்ஷியும், ஷெரினும் கதை பேசிக்கொண்டு இருந்த போது, தலை வலிக்குது கொஞ்ச நேரம் யாரும் பேசாம இருங்கப்பான்னு மீரா சொல்ல, இதை கண்டுக்காத இருவரும் மேலும் பேசி சிரித்துக் கொண்டார்கள். தங்கிக்கமுடியாத மீரா,ஜெயிலில் டாய்லெட்டுக்குள் ஒரு மணி நேரம் இருந்துவிட்டு வந்தார்.

வளர்ந்து வந்தேன்
இப்படி எல்லாமே மீராவுக்கு சாதகமாக இருந்த நிலையில், கடைசியில் தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது போல அவர் செய்துகொண்டது சேரனுடன் மீராவுக்கு முரண்பாடு.
நிறத்தை வைத்து அமுக்கப்பட்டு, கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தேன்னு கண்ணீருடன் சொன்ன மீரா, கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம். மீரா கடைசியில் அருமையாக மாடலிங் கேட் வாக் செய்து.வெளியேறியது பாராட்டும்படி, ரசிக்கும்படி மிக நேர்த்தியாக இருந்தது.


Click it and Unblock the Notifications











