பிக்பாஸில் இவங்களும் கலந்துக்க போறாங்களா... அப்போ ஆக்ஷன் அடிதடி நிச்சயம்

சென்னை : சின்னத்திரை ரசிகர்கள் அதிகமானவர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் தான். இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் டிஆர்பி.,யை இது வரை எந்த டிவி சீரியலாலும் நெருங்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு உலக ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் மட்டுமல்ல இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடத்தப்பட்டாலும் இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் மவுசு கொஞ்சமும் குறையவில்லை. இந்தியில் இந்த நிகழ்ச்சி 14 சீசன்களை கடந்து விட்டது. தமிழில் இந்த ஆண்டு துவக்கத்தில் தான் சீசன் 4 முடிவடைந்தது.

தாமதமாகும் பிக்பாஸ்

தாமதமாகும் பிக்பாஸ்

கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட மலையாளம், தெலுங்கு பிக்பாஸ்களின் இறுதி போட்டி சமீபத்தில் தான் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜுலை மாதம் துவங்கப்படும் என கூறப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 5 கொரோனா காரணமாக கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் தாமதமாகவே நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளது.

தினம் ஒரு தகவல்

தினம் ஒரு தகவல்

பிக்பாஸ் தமிழ் சீசன் 5 துவங்கப்படும் தேதி மற்றும் போட்டியாளர்கள் பட்டியல் என தினம் ஒரு தகவல் வெளியாவதால் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிலும் போட்டியாளர்கள் பற்றிய யூக பட்டியல்களுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. இருந்தாலும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது கமல் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.

லீக்கான போட்டியாளர் பட்டியல்

லீக்கான போட்டியாளர் பட்டியல்

லேட்டஸ்டாக வந்துள்ள தகவலின் படி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற டைட்டில் வின்னர் கனி, சுனிதா, பாபா பாஸ்கர் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். கனி இந்த தகவலை ஏற்கனவே பலமுறை மறுத்து விட்டாலும், அவர் அல்லது சுனிதா நிச்சயம் போட்டியில் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இவர்கள் தவிர போட்டியாளர்களாக பங்கேற்க அதிகம் வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் பிரபலமான பலரின் பெயர்கள் அடிபடுகிறது.

என்ன இவங்களுமா

என்ன இவங்களுமா

அவர்களில் சார்பட்டா பரம்பரை டாடி ஜான் விஜய், ராஜமாதா ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து, ஷகீலாவின் மகள் மிகா உள்ளிட்டோரின் பெயர்களும் உறுதி செய்யப்படாத பட்டியலில் உள்ளது.

அடிதடி கன்ஃபார்ம்

அடிதடி கன்ஃபார்ம்

இதுவரை நடந்த 4 சீசன்களிலும் அடிதடி சண்டைகள், மோதல்கள் நடப்பதாக சில தடாலடி கேரக்டர்களையும், காதல் சீன்களை அரங்கேற்ற சில ஹீரோ, ஹீரோயின்களையும் போட்டியாளர்களாக களமிறக்கி உள்ளனர். அப்படி பார்த்தால் வாய் சண்டையில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் சிலர் போட்டியாளர்களாக களமிறக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

பரபரப்பை கிளப்பியவர்கள்

பரபரப்பை கிளப்பியவர்கள்

இதன் அடிப்படையில் பார்த்தால் வனிதா விஜயக்குமாருடன் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதி பரபரப்பை கிளப்பியவர் ரம்யா கிருஷ்ணன். இதே போல் வனிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை மிகக் கடுமையாக விமர்சித்து பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன், டிக் டாக்கில் மோதலில் பிரபலமானவர் ஜி.பி.முத்து. அதனால் இவர்கள் போட்டியாளர்கள் பட்டியலில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.

எப்போ துவங்குது

எப்போ துவங்குது

பிக்பாஸ் செட் அமைக்கும் பணி ஆகஸ்ட் மாதம் மூன்றாவது வாரத்தில் துவங்கப்பட உள்ளதாம். ஒருவேளை கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் மாத துவக்கத்தில் பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்படலாம் என கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இறுதி போட்டியாளர்கள் பட்டியல் மற்றும் போட்டி துவங்கும் உறுதியான நாள் வெளியாகும் போது அது மிகப் பெரிய சர்ப்ரைசாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X