twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மத்திய, மாநில அரசுகள் வரை போன 'பிக் பாஸ் 3' பிரச்சினை! என்ன சொல்லப்போறாங்க? திக் திக் எதிர்பார்ப்பு

    |

    Recommended Video

    Bigg Boss Season 3: வழக்கறிஞர் சுதன் பிக் பாஸ் சீசன் 3க்கு தடை கேட்டு மனுதாக்கல்

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரே ஆபாசமா இருக்கிறது என்று கூறி, தடை கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனவே, என்ன மாதிரி பதில் வரப்போகிறது என்பதில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தமிழ் டிவி சேனல் வரலாற்றில் காண்பிக்கப்பட்ட ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில், விஜய் டிவியின் பிக்பாஸ் தனி இடம் பிடித்துள்ளது. அமோக டிஆர்பி ரேட்டிங்கோடு, கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, பெரும் ஹிட் அடித்துள்ளது.

    2 சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள பிக்பாஸ் குழு, 3வது சீசனை, வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. 23ம் தேதி முதல் பிக்பாஸ்-3 விஜய் டிவியில் ஆரம்பிக்கப்போவதால், ரசிகர்கள் செம எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    ஆபாசம்

    ஆபாசம்

    இப்படி எல்லாமே நிகழ்ச்சி குழு நினைத்தபடி, நல்லா போய்க்கொண்டிருந்த நிலையில்தான், பிக்பாஸ்-3 ஒளிபரப்ப தடை போடனும்னு சென்னை ஹைகோர்ட்ல வழக்கு போட்டிருக்காரு, வழக்கறிஞர் கே.சுதன். இதற்கு காரணமா அவர் என்ன சொல்றாருன்னா, பிக்பாஸ் ப்ரோக்ராமில் பங்கேற்பவர்கள் எல்லோருமே, கவர்ச்சியா டிரஸ் போட்டுகிட்டு சுத்துறாங்க. போதாததற்கு, டபுள் மீனிங்ல வேற பேசுறாங்க. இப்படி ஒரு நிகழ்ச்சியைத்தான், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றாக அ மர்ந்து பார்க்க வேண்டியிருக்கு. இதற்கு ஒரு சென்சார் கூட இல்லை.

    சென்சார் தேவை

    சென்சார் தேவை

    பிக்பாஸ்-3 நிகழ்ச்சியை ஒளிபரப்பனும்னா, இந்திய ஒளிபரப்பு நிறுவனத்திடம், தணிக்கை சான்று பெற வேண்டும். அப்படியில்லாவிட்டால் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும். இப்படித்தான் சுதன் தன்னோட மனுவில் கேட்டுள்ளார்.

    சமூக கேடு

    சமூக கேடு

    இந்த வழக்கு நீதிபதிகள், எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆர்.ஜெயப்பிரகாஷ் ஆஜராகினார். பிக்பாஸ் நிகழ்ச்சி, இளைய சமூகத்தினரை கெடுக்கிறது என்று அவர் வாதம் முன் வைத்தார். தணிக்கை சான்று இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அவசியம் என்றார்.

    2 வாரம் இருக்கு

    2 வாரம் இருக்கு

    இதைக் கேட்ட நீதிபதிகள், மத்திய, மாநில அரசுகள், மத்திய தணிக்கைத்துறை, விஜய் டிவி நிர்வாக இயக்குநர் ஆகியோர், இதுபற்றி 2 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர். 2 வாரத்திற்கு பிக்பாஸ்-3 நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் எந்த பிரச்சினையும் இல்லைன்னுதான் தெரியுது. அடுத்தகட்டமாக வழக்கு விசாரணைக்கு வரும்போது, பிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு தடை போடப்படுமா, இல்லையான்னு தெரியும்.

    பஞ்சாயத்து

    பஞ்சாயத்து

    மத்திய, மாநில அரசுகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதில்தான், இந்த நிகழ்ச்சியின் அடிநாதம் இருக்கப்போகிறது. ஏற்கனவே கமல்ஹாசன் தனிக்கட்சி ஆரம்பித்து, தேர்தலில் போட்டியிட்ட கோபத்தில் இருக்கும், ஆளும் தரப்பு என்ன மாதிரி பதில் சொல்லப்போகிறது என்பதை பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    English summary
    A petitioner, a lawyer, seeking Ban for Bigg Boss 3 which will be telicaste in the Vijay tv from Sunday, Chennai High Court asking reply from the Union and State governments over this plea.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X