சீரியல் நடிகை ஸ்ருதி நாராயணனின் வீடியோ..துப்பாக்கியை வெச்சு மிரட்டினார்களா?..வக்கீல் ஓவர் பேச்சு
சென்னை: சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோக்கள் சில அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அந்த வீடியோவை பார்த்த பலரும் ஸ்ருதிக்கு ஆதரவாகவே நின்றார்கள். இப்படியெல்லாம் யாரையும் யாரும் செய்யவே கூடாது என்றும் பேசினார்கள். முதலில் இந்த விஷயத்தால் கொஞ்சம் கலங்கிய ஸ்ருதி; பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில்கூட அவர் நடித்த கட்ஸ் என்ற படத்தின் விழாவில் கலந்துகொண்டார் அவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. தற்போதைக்கு சின்னத்திரை டிஆர்பியில் டாப்பில் இருப்பது அந்த சீரியல்தான். அதில் முக்கிய வேடத்தில் நடித்துவருபவர் ஸ்ருதி நாராயணன். இந்த சீரியலுக்கு முன்னதாகவே அவர் சில சீரியல்களில் நடித்திருந்தாலும் இந்த சீரியல்தான் அவருக்கு பெரிய பிரபல்யத்தை ஏற்படுத்திக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

வெப் சீரிஸில் ஸ்ருதி: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் அவர் நடித்திருக்கிறார். அந்தவகையில் சமந்தா நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்த சிட்டாடல் ஹனி பன்னி வெப் சீரிஸில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார் ஸ்ருதி நாராயணன். சின்னத்திரையில் அறிமுகமான சில காலங்களிலேயே வெள்ளித்திரையிலும் அறிமுகமானதை கண்டு பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அதுமட்டுமின்றி வேறு சில வெப் சீரிஸ்களிலும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.
சர்ச்சையை கிளப்பிய வீடியோக்கள்: சூழல் இப்படி இருக்க அண்மையில் ஸ்ருதி நாராயணனின் அந்தரங்க வீடியோ ஒன்று முதலில் வெளியானது. அதில் தயாரிப்பாளரோ, இயக்குநரோ யாரோ ஒருவர் சொல்ல சொல்ல ஸ்ருதி சில விஷயங்களை செய்தார். அது பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. அந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே மேற்கொண்டு அதே மாதிரியான சில வீடியோக்கள் வெளியாகின. அந்த வீடியோக்கள் எல்லாம் ஏஐ என்று கூறினார் அவர்.
தரமான பதிலடி: இருப்பினும் அந்த விவகாரம் தொடர்ந்து வளர்ந்துகொண்டே சென்றதால் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த விஷயத்தில் அனைத்தும் எல்லை மீறி போய்விட்டது. ஃபோன் திரைக்கு பின்னால் இன்னும் உறுதிப்படுத்தாத ஒரு பெண் வாழ்க்கையை கெடுக்க துடிக்கிற அந்த வெட்கக்கேடான மனிதரைப் பற்றி யாருக்கும் பேச நேரமில்லை. இன்னும் இந்த விஷயம் ஒரு பெண்ணை சுற்றிதான் நடந்துகொண்டிருக்கிறது என்று இரண்டு நொடிகள்கூட யாரும் யோசிக்கவில்லை.
15 படங்கள்: மன ரீதியாக பாதிக்கப்படலாம்: இப்படி நடப்பதால் அந்தப் பெண் மனரீதியாக பாதிக்கப்படலாம். காட்டுத் தீ போல் இதை பகிர்வதன் மூலம் அனைத்து ஆண்களுமே காமத்துக்கு ஏங்குபவர்கள் என்பது உறுதியாகியுள்ளது. நானும் உணர்வுகளை கொண்ட ஒரு பெண் என்பதை எத்தனை முறைதான் சொல்வது. மனித குலகத்துக்காக இதை நிறுத்துங்கள். 15 படங்கள்வரை இயக்கிய இயக்குநர் ஒருவர்தான் இந்த மாதிரியான வேலையை செய்கிறார்" என்று பதிலடி கொடுத்திருந்தார்.
வழக்கறிஞர் தமிழ் வேந்தன்: இதனைத் தொடர்ந்து தான் நடித்த கட்ஸ் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் குறித்து யூடியூபில் பேட்டிகள் கொடுத்து பிரபலமாகியிருக்கும் வழக்கறிஞர் தமிழ் வேந்தன் என்பவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேசுகையில், "பொதுவாக ஒருவர் திறமையை காண்பித்துதான் மேலே வர வேண்டும். நிர்வாணத்தை காண்பித்து வரவேக்கூடாது. அந்த வீடியோக்களை பார்க்கையில் யாரோ ஒருவர் சொல்ல சொல்ல இவர் விருப்பப்பட்டுதான் செய்கிறார் என்பது உறுதியாகியிருக்கிறது. அவரது நெற்றியில் யாராவது துப்பாக்கியை வைத்து மிரட்டி படுக்கையை பகிரவோ அல்லது இது போல் செய்யவோ சொன்னார்களா?.. இதுவரை மூன்று வீடியோக்கள் வந்திருக்கின்றன. மொத்தம் 15 வீடியோக்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











