இது என்ன சப்போர்ட் இல்லாமல் நிக்குது.. லீசாவைப் பார்த்து ஓடி வந்த ரசிகர்கள்

சென்னை : கவிதைகள் பேசும் கடல் அலையை அழகழகாய் ரசித்தபடி கடற்கரையில் வண்ண மயில் ஆக ஆட்டம் போட்டுள்ளார் லீசா எக்ளேர்ஸ்.

காற்றில் அசைந்தாடும் கூந்தலை ரசிக்கவா இல்லை அதை அள்ளி விளையாடும் கைவிரல்களை ரசிக்கவா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

அலையோடு விளையாடி ஆடையை பறக்கவிட்டு தூங்கவிடாமல் இப்படி செய்யலாமா செல்லம் என்று ரசிகர்களும் இன்ப ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

கண்மணி சீரியல்

கண்மணி சீரியல்


சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்து தமிழ் ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் சௌந்தர்யாவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் லீசா எக்ளேர்ஸ். தற்போது சீரியலில் இல்லாவிட்டாலும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை கூட்டி வருகிறார் .சீரியலை தாண்டி இவருக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்பதை தற்போது இன்ஸ்டாகிராமில் இவர் ஒரு போஸ்ட் போட்டதற்கு ரசிகர்கள் போட்ட கமெண்டை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சூப்பர் போஸ்ட்

சூப்பர் போஸ்ட்

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் என்பதற்கு இணையாக இவர் நடித்து வந்த சீரியல் முடிவடைந்து விட்டாலும் இவருடைய பெயரை சொன்னதுமே சீரியல் ரசிகர்களின் மனதில் அவருடைய அமைதியான குணமும் , சகிப்புத்தன்மையும் தான் நினைவிற்கு வருகிறதாம். அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்து இழுத்த இவர் அந்த சீரியலின் கண்ணன் மாமாவின் சவுண்டாக மட்டுமல்லாமல் ரசிகர்களின் சௌந்தர்யாவாகவும் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து இருக்கிறார்.

பொது நலன் கருதி

பொது நலன் கருதி

பல நடிகைகளை போலத்தான் இவரும் சினிமாவில் அறிமுகமாகி சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .இவர் முதன் முதலாக பலே வெள்ளையத் தேவா படத்தில் நடித்திருக்கிறார் .அதற்குப் பிறகு பொதுநலன் கருதி ,மடைதிறந்து ,அன்புள்ள லீசா என பல படங்களிலும் நடித்து இருக்கிறார். அன்புள்ள லீசா படத்தில் விஜய் வசந்துடன் நடித்திருக்கிறார் .

பேய் ரோலில்

பேய் ரோலில்

இந்த படத்தில் இவர் ஒரு பேயாக அனைவரையும் பயமுறுத்தி இருக்கிறார் .ஆனால் அதிலெல்லாம் இவருக்கு கிடைக்காத பேரும் ,புகழையும் கண்மணி வாங்கி கொடுத்து விட்டது. பொதுவாக சன் டிவியில் இரவு நேர சீரியலுக்கு தான் ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு இருந்து வரும். இந்த நேரத்தில் வேலைக்கு சென்றவர்களும் ,வீட்டில் வேலை பார்த்து கொண்டிருப்பவர்களும் வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு ஹாயாக அமர்ந்து சீரியலை பார்க்க தொடங்குவார்கள்.

Recommended Video

Bakkiyalakshmi serial Jenifer Biography | இந்த படத்தில் நடித்துள்ளாரா? | Amman, Radhika
அந்த நேரத்தில் கவர்ந்திழுப்பு

அந்த நேரத்தில் கவர்ந்திழுப்பு

அந்த நேரத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பப்பட்டு வந்ததால் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வீட்டின் ஆண்களும் இந்த சீரியலை தான் பார்க்க வேண்டிய நிலைமை இருந்தது .அதனால் இவருடைய முகம் பலருக்கும் பரிச்சயமாக மாறிவிட்டது. தற்போது புது சீரியலில் இவர் எப்போது களமிறங்குவார் என அவருடைய ரசிகர்கள் அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

செம தேவதை

செம தேவதை

அதில் கடற்கரை ஓரத்தில் நடந்தபடி காற்றில் போட்டிருக்கும் ஆடையை அங்குமிங்கும் ஆட்டி கொத்தாக அப்படியே தூக்கி வீசி இருக்கிறார் . அந்த உடை அந்தரத்தில் நிற்கும்போது அப்படியே ஒரு போட்டோ எடுத்திருக்கிறார் .அதை பார்த்ததும் மெய்சிலிர்த்து போன ரசிகர்கள் என்ன மாதிரி வர்ணிக்கலாம் என வார்த்தைகளை தேடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X