வாயை இப்படி விரிச்சு விரிச்சு விட்டா.. என்னாவது.. லிசாவிடம் விழுந்த ரசிகர்கள்!

சென்னை: லிசா எக்லர்ஸ் போட்டுள்ள ஒரு டப்ஸ்மாஷ் வீடியோ ரசிகர்களை உருக்கி எடுத்து வருகிறது. உதடுகளை குவித்து குவித்து துப்பாக்கியால் சுடுவது போல சுட்டுத் தள்ளுகிறார் அதில்.

அது மட்டுமா,, சமீபத்தில் வெயிலுக்கு இதமாக காற்று உடம்பை தழும்பும் வகையில் மெல்லிய ஆடையில் கலக்கல் போஸ் கொடுத்திருந்தார் லிசா. அதைப் பார்த்து ஃபயர் ஆகிப் போயிருந்தனர் ரசிகர்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அதிலும் அந்த சீரியலில் சவுந்தர்யா என்னும் சவுண்டாக கலக்கிக் கொண்டிருக்கும் லிசாவை பிடிக்காதவர்களை இல்லை.

செல்ல மருமகள்

செல்ல மருமகள்

அந்த அளவுக்கு அழகாலும் தன்னுடைய நடிப்பாலும் அனைத்து வீட்டு பெண்களின் செல்ல மருமகளாக வாழ்ந்து வருகிறார் .ஆனாலும் இவர் நான் குடும்ப குத்து விளக்காக மட்டுமல்ல கவர்ச்சியிலும் பின்னி பெடல் எடுப்பேன் என தற்போது இன்ஸ்டாகிராமில் பார்த்ததும் சூடு பற்றிக் கொள்ளும் வகையில் வெரி ஹாட் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

சூடாக்கும் வீடியோக்கள்

சூடாக்கும் வீடியோக்கள்

சும்மாவே கத்திரி வெயில் ஆரம்பித்து மக்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் போது மக்கள் அனைவரும் உடம்பை குளிர வைப்பதற்காக இளநீர் ஜூஸ் போன்ற குளுமையான பொருட்களை தேடிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது போன் சூடாகி போகிற அளவில் லிசா வெளியிட்ட போட்டோக்களும் வீடியோக்களும் தான் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

கவர்ச்சி கதகளி

கவர்ச்சி கதகளி

என்னதான் இவர் சீரியல் சௌந்தர்யா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தாலும் இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு கேரக்டராக இருந்து வருவதை பார்த்ததும் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சிதான் அடைந்திருக்கிறார்கள். இவர் சீரியல்களில் பிசியாக இருந்தாலும் கிடைக்கும் நேரங்களில் ஷாப்பிங் போவதில் அதிகப்படியான மகிழ்ச்சி இருக்கிறது என கூறியிருக்கிறார் .

போட்டோ போட்டு கலக்கல்

போட்டோ போட்டு கலக்கல்

அப்படி செல்லும் நேரங்களில் விதவிதமான போட்டோக்களை எடுத்து குவிப்பதில் தவறுவதில்லை. அதுமட்டுமல்லாமல் வீட்டுக்குள்ளேயே கதவை பூட்டிக்கொண்டு வித்தியாசமான பல போட்டோக்களை எடுத்துக் குவித்திருக்கிறார். அதையும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு ரசிகர்களை மேலும் சூடாக்கி வருகிறார்.

சினிமாவிலும் பிசி

சினிமாவிலும் பிசி

பல நடிகைகள் சீரியலில் நடித்து பிரபலமாகி சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர் சினிமாக்களில் நடித்து அது தனக்கு செட் ஆகவில்லை என தெரிந்ததும் சீரியலில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் .ஆனால் சினிமாக்களில் நடித்து பிரபலமானதைவிடவும் தற்போது சீரியல்களில் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார் .

சூப்பர் ஆதரவு

சூப்பர் ஆதரவு

இந்த அளவிற்கு ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என இவரும் நினைக்கவில்லையாம். அந்த அளவுக்கு இவருடைய ஹோம்லியான முகத்தையும் பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகையும் வைத்துதான் ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கிறார். இவர் சினிமாக்களில் காலடி எடுத்து வைத்த 2016இல் ஒரே நேரத்தில் 7 படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.

சான்ஸ் வரலையே

சான்ஸ் வரலையே

ஆனால் அதில் முதல் முதலாக பலே வெள்ளையத்தேவா என்னும் படம் தான் வெளி வந்திருக்கிறது. அதிலும் எதிரியின் மகளாக நடித்து இருப்பார் .இதில் இவருடைய நடிப்பு மற்றும் அழகு ,அழகாக இருந்தாலும் தான் நினைத்த இடம் கிடைக்கவில்லை என மனதிற்குள் வருந்திக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பொதுநலன் கருதி எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் .

தொடர்ந்து சன் டிவி

ஆனால் 2018 இல் முதன் முதலில் சன் டிவியிலிருந்து இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே சந்தோஷத்தில் இருந்திருக்கிறார். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் இது பாட்டுக்கு அனைத்து நடிகைகளும் டான்ஸ் போட்டு கொண்டு இருக்கும் போது இவர் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு உள்ளாடை தெரியும் அளவில் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு வெயிலுக்கு இதமாக சும்மா நச்சுன்னு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

உதடுகளைக் குவித்து டுமீல்

அதிலும் ஒரு இந்திப் பாடலுக்கு இவர் கண்ணால் சுடுவது போல புருவத்தை ஏற்றி இறக்குகிறார். உதடுகளைக் குவித்து குவித்து சுடுகிறார். இதைப் பார்க்கும் ரசிகர்களுக்கு செம கூலாகி விடுகிறதாம். இதனை பார்த்ததும் ரசிகர்கள் பலருக்கு சூடு தலைக்கு ஏறி போய் குளிர்பான கடைகளைத் தேடி பார்த்துக் கொண்டிருக்கின்றனராம் . அப்படி சூட்டைக் கிளப்பி வருகிறார் லிசா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X