மொட்டை மாடியில் மல்லாக்க.. மழையில் நனைந்தபடி.. சிலிர்க்கும் லிசா!

By Velsamy

சென்னை: சீரியல்களில் மட்டும்தான் சௌந்தர்யா கேரக்டரில் ரசிகர்களின் சௌதரியமாக இருக்கும் லீசா எக்கிளர்ஸ் சமூக வலைத்தளங்களில் போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிட்டு ரசிகர்களை பாடாய் படுத்துகிறார்.

அதுவும் எங்கும் மழை இல்லாத நேரத்தில் அவர் வீட்டு மொட்டை மாடியில் மட்டும் மழை பொழிந்து இருப்பது அதிசயம் என்றால் மழையில் நனைந்தபடி பலபேருக்கு சூடு கிளப்பும் வகையில் அவர் வெளியிட்ட வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது

பழைய மழையில் நனைந்த பழைய படம்தான் என்றாலும் கூட தனக்கு ரொம்பப் பிடித்தது மழை என்பதைக் காட்டுவதற்காக இந்த பழைய வீடியோவைப் போட்டுள்ளாராம். பார்த்து பார்த்து ரசிகர்கள் மெய் சிலிர்க்கிறார்கள்.

செளந்தர்யா

செளந்தர்யா

தற்போது கண்மணி சீரியல் சௌந்தர்யா கேரக்டரில் பட்டி தொட்டியெல்லாம் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் .இவர் அறிமுகமானது சினிமாக்களில் கதாநாயகியாக இருந்தாலும் இவருக்கு அங்கு அந்த அளவிற்கு வாய்ப்புகள் இவருக்கு தகுந்த மாதிரி அமையவில்லை .அதனால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து ஒவ்வொரு வீட்டிலேயும் தினமும் தரிசனத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார் .

மனசை கொள்ளையடித்த ராசாத்தி

மனசை கொள்ளையடித்த ராசாத்தி

சன் டிவியில் ராசாத்தி சீரியல் மூலமாக முதல்முதலில் மனதை கொள்ளை கொண்ட இவர் தற்போதும் அதே சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மூலமாக அனைத்து கிராம சீரியல் ரசிகர்களின் மனதிலும் சவுண்டாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அங்கீகாரம்

அங்கீகாரம்

இந்த சீரியல் இவரது நடிப்பு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்று இவர் கருதி வந்தாலும் இவர் தன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறார் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதால் தான் இந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் இடத்தை பிடிக்க முடிந்தது என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .இந்த சீரியலின் கதாநாயகன் சஞ்சீவ் இவரை சவுண்டு என்று கூப்பிடுவார்.

செல்லமான சவுண்டு

செல்லமான சவுண்டு

அவரைப் போலவே அவருடைய ரசிகர்களும் சவுண்டு என்று தான் கூப்பிடுவார்கள். பலபேருக்கு இவருடைய பெயர் லிசா ஏஃ கிளார்ஸ் என்பதே தெரியாமல் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர் வெளியிடங்களுக்கு செல்லும் போது இவருடைய ரசிகர்கள் இவரை சௌந்தர்யாவாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ரசிகர்கள் பட்டாளம்

ரசிகர்கள் பட்டாளம்

தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் சீரியல் நடிகைகளும் திரைப்பட நடிகர்களை விடவும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கின்றனர் .அந்த மாதிரிதான் இவருக்கும் பெரும் ரசிகர்கள் கூடி வருகின்றனர். இவர்களுடைய ஸ்பெஷல் என்னவென்றால் இவருடைய ரசிகர்களின் கமெண்ட் களுக்கு பொறுமையாக பதில் அளித்து வருகிறார். இதனாலேயே இவருடைய ரசிகர்களுக்கு இவரை ரொம்பவே பிடித்திருக்கிறது .

ரொம்பப் பொறுமை

ரொம்பப் பொறுமை

இவரைப்பற்றி கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு கூட பொறுமையாக பதில் அளித்து வரும் பொறுமைசாலி ஆகவும் இவர் இருந்து வருகிறார். சில நடிகைகள் இதே இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக பாப்புலராகி பிக்பாஸ் வரைக்கும் சென்று வந்தாலும் இவர் இன்னும் அந்த மாதிரி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றாலும் திரைப்படங்களில் நடிகையாக வலம் வர வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம் .

விதம் விதமான போட்டோஷூட்

விதம் விதமான போட்டோஷூட்

அதற்காக அடிக்கடி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி கொண்டிருக்கிறார். இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் சில விளம்பர படங்களிலும் நடித்துக் கொண்டிருப்பதால் அதற்காக எடுக்கும் போட்டோக்களையும் தவறாமல் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதுவும் போதாதென்று அடிக்கடி இவரே டப்ஸ்மேட்ச் வீடியோக்கள் பண்ணி அதையும் ரசிகர்களுக்காக பதிவிட்டு வருவார்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

தற்போது அவர் பதிவிட்ட வீடியோக்களை பார்த்து லைக் மற்றும் கமெண்ட்களும் அள்ளுது. விண்ணோடு மேள சத்தம் என்னும் பாட்டுக்கு மொட்டைமாடியில் மல்லாக்க படுத்து மழைநீரில் மொத்த உடலையும் நினைத்து ரசிகர்கள் கண்களுக்கு குளுமையை காட்டி பார்க்கின்றவர்கள் சூடேறி போகும் அளவிற்கு துள்ளல் ஆட்டம் போட்டு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் .

விடாமல் பெய்த மழை

விடாமல் பெய்த மழை

இதைப் பார்த்து பலர் தூக்கத்தை தொலைத்து இந்த வீடியோவை பார்த்து வருகிறார்களாம் .அதுவும் முகத்தில் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் மழையில் சொட்ட சொட்ட இவர் ஆடி இருப்பது பல பேருக்கு இவரது உருவம் மட்டும் தான் கண்ணுக்குள்ளே நிற்கிறதாம். இந்த வீடியோவை பார்த்து பலர் ஹாட்டின் களை பறக்கவிட்டு கவிதைகளை கொட்டி வருகிறார்கள். ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கு லிசாவும் பதிலுக்கு முத்தங்களை பறக்க விட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X