Bigg boss 3 tamil: விடுங்கப்பா.. மீரா சொல்வதையும் கேளுங்கப்பா... இனி குறும்படம்தான்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Meera Eliminate? : மீராவை வெளியேற்றும் பிக் பாஸ்

சென்னை: விஜய் டிவியின் பிக் பாஸ் 3 சீசன் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதை எத்தனை முறை சொன்னாலும் ,மீண்டும் மீண்டும் உண்மையை உரக்கத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தால், எல்லார் வீடுகளிலும் ஹாலில் குடும்பமாக அமர்ந்து கமெண்ட் சொல்லிக் கொண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்ப்பது காதுகளில் விழத்தான் செய்கிறது.

பிக் பாஸ் முதல் சீசனுக்கு அடுத்து இந்த மூன்றாவது சீசன்தான் நன்றாக இருக்கிறது என்கிற பேச்சும் எழுகிறது. மூன்றாவது சீஸனின் ஹவுஸ் மேட்ஸ் கொஞ்சம் இயல்பாக இருப்பது போல மக்களுக்கு தோன்றுகிறது.

மேடாக மீரா

மேடாக மீரா

பிக் பாஸ் ஹவுசில் கடைசி ஹவுஸ் மேடாக மீரா என்ட்ரி கொடுத்ததும், அவர் மீதான தாக்குதல்கள் அவரே எதிர்பாராத வண்ணம் இருந்தன. .இது உண்மை. அவர் மற்ற ஹவுஸ் மேட்ஸை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்று டாஸ்க் வைத்த போது, அவரை சாக்ஷியும், அபிராமியும் சேர்ந்து இன்சல்ட் பண்ணியது உண்மைதான். கடைசியில் அமர்ந்து இருந்த இயக்குநர் சேரனையும் அவர் இம்ப்ரஸ் செய்ய முயற்சிக்க,போதும்மா... போதும் இம்ப்ரஸ் ஆகிட்டேன்னு மீராவுக்கு வேலை வைக்காமல் சேரன் சொல்ல, அவரை ஹக் செய்யப் போன மீராவை சேரன் தவிர்த்துவிட்டு, வேணாம்னு கை எடுத்து மட்டும் கும்பிட்டு எதோ பேசி இருக்கார்.

ஹர்ட்டான மீரா

ஹர்ட்டான மீரா

அப்போது சேரனிடம் ஹர்ட்டான மீரா இந்த வஞ்சத்தை மனதிலேயே வைத்திருந்து இருப்பார் போலும். அதே சேரன் அப்போதும் தான் மகள் போல பாவிக்கும் லொஸ்லியாவிடம் எப்போதும் கை கோர்த்துக் கொண்டு இருப்பது... இதுபோன்ற செயல்களை மிக சைலண்டாக கவனித்து வந்திருக்கார். எல்லாம் சேர்ந்து நேற்று பட்டாசாக வெடித்துள்ளது.

டாஸ்க் நாட்டாமை

டாஸ்க் நாட்டாமை

இந்த வாரம் பிக் பாஸ் ஹவுசில் நாட்டாமை டாஸ்க் நடந்துகிட்டு வருது. இதில் சேரன் ஒரு ஊர் நாட்டாமையாகவும், மதுமிதா இன்னொரு ஊர் நாட்டாமையாகவும் இருக்காங்க. இதில் லொஸ்லியா திருடியாக டாஸ்க் செய்கிறார். இவர் ஏதோ ஒரு பொருளை திருடிச் சென்றுவிட, அங்கு சாக்ஷி, லொஸ்லியா, மீரா என்று பெண்கள் கூட்டமாக இருக்க, அங்கு வந்த கவினும், சாண்டியும் வில்கிப் போயிடறாங்க.

இதை சேரனும்

இதை சேரனும்

இதை சேரனும் செய்திருக்க வேண்டும், அங்கு இருப்பது திருடியாக டாஸ்க் செய்வது இவரை அப்பா என்று ஆசையாக கூப்பிடும் லோசலியாவாச்சே. அதனால்,சேரன் நாலு பெண்களுக்கு இடையில் புக முயற்சித்தவர். முதலில் லொஸ்லியவை மறைத்து இருந்த மீராவை வயிற்றில் கை வச்சு தள்ளி விட்டு இருக்கார்.

ஒல்லிக்குச்சி மீரா

ஒல்லிக்குச்சி மீரா

ஒல்லிக்குச்சி மீராவுக்கு சேரனின் இந்த முரட்டுத் தனம், வயிற்றில் வலியை உண்டாக்கி இருக்கிறது. இதை எல்லார் முன்னிலையிலும் சொல்ல வேண்டும் என்று விரும்பிய மீராவுக்கு கேப்டனும் மீட்டிங் அரேஞ் செய்ய, மீரா இதை சொன்னதும், நடிகர் சரவணன் நடுநிலையாக டாஸ்க் என்று சொல்லிவிட்டார். ஆனால், சேரன் முரட்டுத்தனமான பிஹேவ் பண்ணினார் என்றுதான் மீரா சொன்னாரே தவிர, அதோடு சேர்த்து, முன்பு தன்னிடம் சேரன் நடந்துக் கொண்டதையும் சேர்த்து சொல்லியதால் பிரச்சனை பெரிதாகி விட்டது. இதுதான் உண்மை... கொஞ்சும் புரிஞ்சுக்க முயற்சி செய்யுங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X