Don't Miss!
- Finance
தொழில்நுட்ப கோளாறு எதிரொலி.. ஜிஎஸ்டி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு!
- News
எல்லாம் நடிப்பா கோபால்ல்ல்? "கல்ப சமாதி" நிலைக்கு போன நித்தியானந்தா! பின்னணியில் ஆபரேஷன் கைலாஸா?
- Lifestyle
தேனில் பெருங்காயத் தூளை கலந்து சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?
- Sports
புதிய தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் நியமனம்.. இந்திய அணியில் அதிரடி திருப்பம்.. காரணம் என்ன?
- Automobiles
டாடா விற்கு தலைவலியை உருவாக்கும் ஹூண்டாய்... அடுத்த வருசம் இருக்குது பெரிய வேட்டை...
- Technology
மழையாக பொழிந்த மர்ம உலோக பந்து- பதற்றத்தில் குஜராத் கிராம வாசிகள்: சம்பவ இடத்துக்கு வந்த ஆராய்ச்சி குழு!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறப்பு நிகழ்ச்சிகள் பட்டியலே அள்ளுதே.. வேற மாரி பட்டய கிளப்பும் கலர்ஸ் தமிழ்!
சென்னை : பொங்கல் பண்டிகையையொட்டி சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
புகழ்பெற்ற பேச்சாளர்களின் சிறப்பு பட்டிமன்றம், வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் திரைப்படங்களும் ஒளிபரப்பாகிறது.
ஜனவரி 14, வெள்ளி முதல் 16 ஜனவரி, ஞாயிறு வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பு பொங்கல் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழுங்கள்.
குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஒன்றிணைந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடும் இத்தருணத்தில் அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக வரும் வெள்ளிக்கிழமை முதல் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.
பிக்
பாஸ்
தமிழ்
சீசன்
5:
யாருக்கு
அதிக
ஓட்டு?
யார்
கடைசி
இடத்தில்?
எதிர்பாராததை
எதிர்பார்க்கலாமா?

சிறப்பு பட்டிமன்றம்
நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தலைமையில் நடைபெறும் சிறப்பு பட்டிமன்றம் முதல் நட்சத்திர பட்டாளங்கள் பங்கேற்கும் கலர்ஸ் தமிழ் திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இந்த பட்டிமன்றத்தின் சிறப்பு பேச்சாளர்களாக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜன், ரமேஷ் கன்னா, தினேஷ், புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சுமதி ஸ்ரீ, நடிகை ஜாங்கிரி மதுமிதா, நித்ய பிரியா ஆகியோர் பேச இருக்கிறார்கள்.

தமிழ் திருவிழா
அதனைத் தொடர்ந்து "தமிழ் திருவிழா" என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர்கள் ஆதவன் மற்றும் பரினா ஆசாத் ஆகியோர் தொகுத்து வழங்க விருக்கிறார்கள். 3 மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த சிறப்பு நிகழ்ச்சியில் விதவிதமான நடனங்கள், பின்னணி பாடகர்கள் வேல்முருகன், முகேஷ் மற்றும் வினைத்தா சிவகுமார் ஆகியோரின் பாடல்கள், விலாநோகச் செய்யும் சிரிப்பு நிகழ்ச்சி மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை இடம் பெரும்.

சில நேரங்களில் சில மனிதர்கள்
இந்த கொண்டாட்டத்தில் தமிழ் சினிமாவைச் சேர்ந்த சந்தானம், மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள் "திரைப்படத்தின் குழுவினர் அசோக் செல்வன், ரித்விகா, மணிகண்டன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். கலர்ஸ் தமிழ் திருவிழா என்னும் இந்த நிகழ்ச்சி காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

புது நிகழ்ச்சிகள்
இது குறித்து கலர்ஸ் தமிழ் வர்த்தக தலைவர் ராஜாராமன் கூறுகையில், "சிறப்பு மற்றும் உற்சாகம் நிறைந்த இந்த பொங்கல் பண்டிகையானது குடும்ப ஒற்றுமையை காப்பதிலும், கவலைகளை மறக்கவும் செய்கிறது. குடும்பங்களை மிகுந்த ஈடுபாட்டுடனும் மகிழ்ச்சியுடனும் வைத்திருக்கும் விதமாக குறிப்பாக தற்போதைய தொற்று நோய் நிலையை கருத்தில் கொண்டு, பல மணி நேரம் பொழுதை போக்கும் விதமாக பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், இந்த பொங்கலை எங்கள் கலர்ஸ் தமிழ் குடும்பத்துடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவதோடு, எங்கள் தொலைக்காட்சியின் முதல் பட்டிமன்ற நிகழ்ச்சியையும் வழங்க இருக்கிறோம். இந்த பட்டிமன்றம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த கலர்ஸ் தமிழ் திருவிழா உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

சிறப்பு திரைப்படங்கள்
மேலும், பொங்கல் பண்டிகையை உற்சாகப்படுத்தும் விதமாக, மம்முட்டி, ஆர்யா, பிரித்விராஜ் மற்றும் பிரியா ஆனந்த் நடித்த லோக்கல் பாய்ஸ் திரைப்படம் சனிக்கிழமை, மாலை 4.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை, அன்று ஆர்.எஸ். கார்த்திக் மற்றும் அயிரா நடித்த "என்னங்க சார் உங்க சட்ட"ம் என்ற திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகளை உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்த்து மகிழுங்கள்.