Bigg boss 3 tamil: கவின் எந்தெந்த மாமா பொண்ணுங்க அத்தை பொண்ணுங்க மேல கை போட்டு பேசினார்?

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, சுத்த போர். சுவாரஸ்யம் ஒன்றுமில்லை, எங்கே இந்த வாரம் வெளியேற்றம் செய்யப்பட்டு விடுவோமோ என்று நாமினேட் ஆன ஹவுஸ் மேட்ஸ் பயந்துகொண்டு அடக்கி வாசிச்சு வருகிறார்கள்.

ஆரம்பத்தில் கண்டதையும் பேசி சிக்கலில் மாட்டி, பின்னர் படுத்துக்க கொண்டு அழுத அபிராமி இருக்கும் இடம் தெரியலை. எப்போதாவதுதான் இவர் காமிராவில் காண்பிக்கவும் படுகிறார்.

மோகன் வைத்யா ரொம்ப ரொம்ப அடக்கி வாசிக்கிறார். இயல்பாக இருப்பது சாண்டி, ஷெரின் போன்ற ஓரிருவர்தான். இன்று நம்மவர் உலக நாயகன் வருவார் என்று, சிறப்பாக காத்திருக்க உள்ளே எதுவும் நடக்கவில்லை.

லொஸ்லியா அபிராமி

லொஸ்லியா அபிராமி

அபிராமி வீட்டுக்கு வந்த புதிதில் கவின் மீது கிரஷ்னு சொன்னார். லொஸ்லியா கவின் புடிக்கும்னு சொன்னார். அபிராமி, லொஸ்லியா இருவர் மட்டுமின்றி ஷாக்ஷி, ஷெரின் நால்வரைம் ஓர் கண்ணோட்டத்தில் பார்த்து பழகுவதாகவும், என்னவோ தான் பிக் பாஸுக்கு பெரிய கன்டென்ட் தந்து விட்டது போலவும் கெத்தாக வலம் வந்தார். அதோடு கூடவே , என்னோட மாமா பொண்ணுங்க, அத்தை பொண்ணுங்க கூட இப்படித்தான் பழகுவேன். அப்படித்தான் இங்கேயும் தோள் மேல கை போட்டு பழகறேன்னு சொன்னார்.

முறைப் பெண்கள்

முறைப் பெண்கள்

என்னதான் உறவு முறைப் பெண்கள் என்றாலும் இப்படி பழக எந்த வீட்டில் விடுகிறார்களோ தெரியவில்லை. திருச்சியில் பிறந்து வளர்ந்த இவர், தனது முறைப் பெண்களின் அத்தனை பேரிடமும் ஒரே மாதிரி தோளில் கை போட்டு, பழகுவாராம். அதில் ஓரிரு முறைப் பெண்களுக்கு பொஸசிவ் வந்து இருக்காதா? பெண்கள் என்றாலும் , ஆண்கள் என்றாலும் அப்படித்தானே? ஒருவேளை சின்ன வயசில் இப்படி விளையாடியதை இப்போது பழகுவது போல சொல்கிறாரோ என்னவோ.

லொஸ்லியா ஷாக்ஷி

லொஸ்லியா ஷாக்ஷி

அபிராமி விலகிக் கொள்ள, ஷெரின் டிஸ்டன்ஸ் மெயிட்டெயின் செய்ய, கடைசியில் மிஞ்சியவர்கள் ஷாக்ஷியும் லொஸ்லியாவும்தான். இதில் ஷாக்ஷியுடன் கவின் பொஸசிவ் காண்பிக்க, அவருக்குள் கவின் மேல் காதல் வந்து இருக்கிறது போலும். ஆனாலும் இவர் பொஸசிவ்க்கு மதிப்பு கொடுக்காமல் லோஸ்லியாவிடம் பழகி ஷாக்ஷியை .வெறுப்பேத்த கடைசியில், பாத் ரூமுக்குள் கதறி கதறி அழுதுவிட்டு வருகிறார் கவின்.

ஏமாற்றம் கவின்

ஏமாற்றம் கவின்

தான் என்னவோ பிக் பாஸுக்கு கன்டென்ட் கொடுத்தால், பிக் பாஸ் விறுவிறுப்பாகும் என்று நினைத்து இப்படிப்பட்ட இழிவான செயல்களை செய்து, பெயரை கெடுத்துக் கொண்டு இருக்கார் கவின். பிக் பாஸ் ஹவுசில் இப்போது எந்த ஹவுஸ் மேட் பருப்பும் வேகாதபடி, வெறுமையா போயிகிட்டு இருக்கு. கவின் இப்போது வேண்டுமானால் ஹீரோ போல அங்கே வலம் வரலாம். வெளியில் வந்தால் எந்த பெண்களும் இவரை விரும்ப மாட்டார்கள்.

அதான் லொஸ்லியா சொல்கிறாரே, உங்களுக்குள் இவ்வளவு நெருக்கம் உள்ளதுன்னு என்னிடம் ஏன் கதைக்கையில் சொல்லலை என்று. இந்த பொழப்புக்கு....

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X