வாட்டர்மெலன் திவாகருக்கு ஒரு மண்ணும் தெரியாது.. எகிறி விளாசிய சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்

சென்னை: கடந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று வாட்டர்மெலன் திவாகரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் படப்பிடிப்பின் போது புகழ், மாகாபா ஆனந்த், கானா வினோத் உள்ளிட்டோர் தாக்கி விட்டனர் என்று திவாகர் கூறியதுதான். அது மட்டும் இல்லாமல் காவல்துறையில் புகாரும் அளித்தார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் இந்த விவகாரம் தொடர்பாக சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகர் லொள்ளு சபா பழனியப்பன் தெரிவித்துள்ள தகவல்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.

இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, " நானும் வாட்டர்மெலன் திவாகரும் சில நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளோம். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவர் எனக்கு அருகில் அமர்ந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கலந்து கொண்டார். ஸ்ரீகாந்த் தேவா குறித்து என்னிடத்தில், சார் அது யார் என்று அவரை காட்டிக் கேட்டார். நான் உடனே அவர் தான் ஸ்ரீகாந்த் தேவா, இசையமைப்பாளர். இசையமைப்பாளர் தேவாவின் மகன் என்று கூறினேன்.

Lollu Sabha Palaniappan Slams Watermelon Divakar He Knows Nothing Amid CWC Controversy

ஒன்னும் தெரியாத மண்ணு: அதன் பின்னர் தேவா என்றால் யார் என்று என்னிடத்தில் கேட்டார் பாருங்க, அங்கதான் நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாட்ஷா, அண்ணாமலை, கமல் சாரின் அவ்வை சண்முகி என எத்தனை எத்தனை ஹிட் படங்கள், ஆல்பம் ஹிட் கொடுத்துள்ளார். அவரையே இவருக்குத் தெரியவில்லை. ஒரு மண்ணும் தெரியவில்லை என்று எனக்கு அன்றுதான் தெரிந்தது. ஆனால் உடனே மேடைக்கு சென்றதும் தேவா சாரின் மகன் ஸ்ரீகாந்த் தேவா சார் வந்தாரு என்று பேசினார். நான் மிரண்டு விட்டேன்.

பொறாமையா?: மாகாபா ஆனந்த், புகழ் உள்ளிட்ட பலரும் மிகவும் சிரமப்பட்டு தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளார்கள். அப்படிப்பட்ட நபர்கள் இப்படி ஒன்றுமே தெரியாத ஒருவரைப் பார்த்து பொறாமைப் படுவார்களா? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம். நானும் புகழும் தற்போது ஒரு படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்த படத்தின் படப்பிடிப்புக்கு சென்றதுமே, புகழைப் பார்த்து வணக்கம் தம்பி என்று கூறினேன். உடனே புகழ் எனக்கு வணக்கம் வைத்துவிட்டு, அண்ணே, இந்த படத்தில் நான் தான் உங்களுக்கு ரெகமண்ட் செய்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று தோன்றியது, அதனால் தான் உங்களை சொன்னேன் என்று கூறினார். அப்படி கஷ்டப்பட்டு வந்தவர்கள் இந்த ஒன்றுமே தெரியாதவரைப் பார்த்து பொறாமைப் பட போகிறார்களா?" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X