லொள்ளு சபாவை திரும்ப போடுங்க.. செம்ம ஜாலியா இருக்கும்.. ரசிகர்கள் ஆர்வம்!

சென்னை : விஜய் டி.வியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப ரசிகர்கள் வேண்டுகோள்.

முக்கிய தொலைகாட்சியான தூர்தர்ஷன் இராமாயணம், சக்திமான் ஒளிபரப்பி வராங்க அதேபோல தமிழில் விஜய் தொலைகாட்சி மனசு வச்சு லொள்ளு சபாவை மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் இணையத்தில் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள்.

lollu sabha re-broadcast

கொரோனா தொற்று இந்தியாவில் பெரிய அளவில் பரவுனா இந்தியா 21 வருஷம் பின்னாடி போய்விடும் என்ற அச்சத்தில் இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் லாக்டவுனை அறிவித்துள்ளது .

இந்த நேரத்தில் பெரும்பாலான மக்கள் வீட்டிலே முடங்கி இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களின் பிரத்யேக பொழுதுபோக்காக தொலைகாட்சியை பார்த்து வருகின்றனர் .

பல தொலைகாட்சிகளில் நாடக ஸ்லாட்டுகள் குறைந்து வருவதால் நாடகங்களை நிறுத்தி அதிகபடியாக திரைப்படங்களை திரையிட ஆயத்தமாகி உள்ளனர். இதே நேரத்தில் ஹிந்தியில் இராமாயணம் மற்றும் சக்திமானை மீண்டும் ஒளிப்பரப்பி வருகிறது தூர்தர்ஷன் .

lollu sabha re-broadcast

80கள் மற்றும் 90களில் சிறந்த தொடராக இந்தியர்கள் அனைவராலும் பார்க்கப்பட்ட தொடர்களை மீண்டும் ஒளிப்பரப்பி ரசிகர்களை குஷிபடுத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் ஒளிப்பரப்பிய படங்களை மீண்டும் ஒளிப்பரப்புவதை விட சில சிறப்பான தொடர்களை தமிழில் ஒளிப்பரலாம் என இணையத்தின் வாயிலாக ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

lollu sabha re-broadcast lollu sabha re-broadcast

தமிழில் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகி பெரிய அளவில் மக்களை சிரிக்க வைத்த லொள்ளு சபா நிகழ்ச்சியை மீண்டும் ஒளிப்பரப்பலாம் என்று ரசிகர்கள் விஜய் தொலைகாட்சியை கேட்டு கொண்டுள்ளனர் .

லொள்ளு சபா மறக்க முடியாத நகைச்சுவை தொடர்,இந்த தொடரில் இருந்து தான் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் என்று சொல்லபடும் பல நட்சத்திரங்கள் வந்திருக்கின்றனர் .

lollu sabha re-broadcast

இதில் சந்தானம் ,ஸ்வாமிநாதன் மனோகர் ,யோகிபாபு, ஜாங்கிரி மதுமிதா, ஜீவா,லொள்ளு சபா பாலாஜி போன்ற பல முன்னணி நடிகர்கள் லொள்ளு சபாவில் இருந்து வந்தவர்கள் தான். இவர்களின் ஆரம்ப கால நகைச்சுவையை மீண்டும் பார்ப்பது மனதிற்கு பெரிய அளவிலான மகிழ்ச்சியை கொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X