மூணு கிளி பறந்துச்சு....மூணாவது கிளி பின்னாலயும்.....எப்படி?
சென்னை: சன் டிவியின் லொள்ளுபா நிகழ்ச்சியில் பலரும் வந்து பலவித ஜோக்ஸ் சொல்லுவாங்க. நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்க மதுரை முத்து, ஆதவன் வருவாங்க.
சிறப்பு நடுவர்களாக இயக்குநர் பாண்டியராஜன், நடிகை மீனா வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்கிறார்கள்.
அப்போது சிலர் ஜொக்ஸ் சொல்லுவார்கள். சிலர் ஸ்கிட் செய்து நகைச்சுவையாக நடிப்பார்கள். இப்படி லொள்ளுபா நிகழ்ச்சி சிறப்பாக இருக்கு.

மூணாவது கிளி பின்னாலயும்
மூணு கிளி வரிசையா பறந்துகிட்டே இருந்துச்சாம்... முதல் கிளி சொல்லுச்சாம் என் பின்னாடி ரெண்டு கிளி வருதுன்னு...சரின்னு பார்த்தால்..ரெண்டாவது கிளி சொல்லுச்சாம்..என் பின்னாலயும் ரெண்டு கிளி வருதுன்னு...
இது எப்படி என்று யோசிப்பதற்குள்...மூணாவது கிளி என் பின்னாலயும் ரெண்டு கிளி வருதுன்னு சொல்லுச்சாம்... இதென்னடா வம்பாய் போச்சுன்னு பார்த்தால் சொன்னதைத்தான் சொல்லுமாம் கிளிப்பிள்ளை!

துரோகம் நண்பன்
ஏய்... அங்கே போயி பாருடா உன்னோட ஆளு,உன் நண்பனோட உட்கார்ந்து பீச்சில உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காண்டான்னு சொல்றான். ஓடிப்போய் பார்த்துட்டு வந்த இவன்,
சேச்சே...அவன் என் நண்பன் இல்லைடா... எவனோ ஓருத்தன்... என் நண்பன் எனக்கு துரோகம் செய்ய மாட்டாண்டான்னு சொல்றான். ஆனா, அவன் பேசிகிட்டு இருந்தது இவனோட காதலி கிட்டத்தான்.

ஆங்கிலத்தில் ஓடுது
உன் வயசு என்னப்பான்னு கேட்டால் இந்த வருஷம் 27 நடக்குதுன்னு சொல்றாங்க. அதே ஆங்கிலத்தில் சொல்லும்போது 27 ரன்னிங்ன்னு சொல்றாங்க.அப்போ தமிழில் வயசு நடக்கும். ஆங்கிலத்தில் வயசு ஓடுமா?
சந்தேகம் வரும்தானே....

புலம்பர் பிளம்பர்
என்னடி... உங்க வீட்டுக்குள்ள ஒரே புலம்பல் சத்தமா கேட்குதுன்னு ஒருத்தி கேட்கறா...
அதை ஏன்டி கேட்கற...பிளம்பர்னு சொல்லி கல்யாணம் கட்டி வச்சாங்க...அவரு எப்போ பார்த்தாலும்...அந்த வீட்டுல இவ்ளோ பாக்கி, இந்த வீட்டுல இவ்ளோ பணம் பாக்கி வச்சுக்கிட்டு தர மாட்டேங்கறாங்கன்னு சொல்லி சொல்லி பிளம்பர் புலம்பர் ஆயிட்டர்னு சொல்றா இவ.


Click it and Unblock the Notifications











