லாஸ்லியா க்யூட்டா ஆட, தர்ஷன் சாணி மிதிக்க, சாக்ஷி கன்னத்தை கிள்ள: ஒரே கூத்து தான் போங்க

By Siva

Recommended Video

Bigg Boss 3 Tamil : Highlights: மது தன்னை தமிழ் பெண் என்று அடையாளம் காண்பது சரியா?- வீடியோ

சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் தர்ஷன், லாஸ்லியா டான்ஸ் ஆடிய வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிக் பாஸ் 3 போட்டியாளரான லாஸ்லியாவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. நிகழ்ச்சி துவங்கிய முதல் நாளே அவருக்கு ட்விட்டரில் ஆர்மி துவங்கிவிட்டார்கள்.

Losliya army shares a cute dance video

அதை பார்த்த கோலிவுட் பிரபலங்கள் சிலரே, அடப்பாவிகளா முதல் நாளே ஆர்மியா, உங்களுக்கே இதெல்லாம் ஓவராக தெரியவில்லையா என்று கேட்டனர். லாஸ்லியாவை அவரின் ஆர்மியும், ரசிகர்களும் கொண்டாட முக்கிய காரணம் அவரின் அழகு. லாஸ்லியா சிரிப்பை பாரேன், அழகை பாரேன், டான்ஸை பாரேன் என்று தான் ஆர்மிக்காரர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் லாஸ்லியா செய்தி வாசிக்கும் விதமும் அவர்களுக்கு பிடித்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் காலையில் எழுந்தவுடன் தள்ளி தள்ளி போகாதம்மா நில்லு நில்லு பாடலுக்கு லாஸ்லியா டான்ஸ் ஆடினார்.

காலையில் எழுந்ததுமே தலைவி எப்படி உற்சாகமாக ஆடுகிறார் பாருங்க என்று கூறி அந்த வீடியோவை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த டான்ஸ் வீடியோவில் லாஸ்லியா சுறுசுறுப்பாக ஆடுகிறார், தர்ஷனோ சாணி மிதிப்பது போன்று எதையோ செய்கிறார், சாக்ஷி அகர்வால் வந்து லாஸ்லியாவின் கன்னத்தை கிள்ளுகிறார்.

க்யூட்டாக இருப்பதற்காக மட்டும் லாஸ்லியாவுக்கு டைட்டில் கிடைத்துவிடாது என்று நெட்டிசன்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். லாஸ்லியாவை போன்றே அவரின் ஆர்மியும் அப்பாவியாக உள்ளது. சும்மா சும்மா லாஸ்லியாவின் அழகை பாராட்டி ட்வீட் போடுவதை நிறுத்துங்க லாஸ்லியா ஆர்மி. அதை பார்த்து பலர் கடுப்பாகி லாஸ்லியாவை திட்டுகிறார்கள்.

மதுமிதா போன்று லாஸ்லியாவை வனிதா டார்கெட் செய்தால் அந்த அப்பாவி பெண்ணால் தாக்குப்பிடிக்க முடியாது. அதனால் தானோ என்னவோ, நமக்கு எதற்கு வம்பு, இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டு போவோம் என்று இருக்கிறார் போன்று.

லாஸ்லியா மட்டும் அல்ல தர்ஷனும் பிக் பாஸ் வீட்டில் கடைசி வரை தாக்குப்பிடிப்பார் என்று நம்பப்படுகிறது. தர்ஷனுக்கு கோலிவுட்டில் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X