twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைவியையா கோபப்பட வைக்கிறீங்க, பிக் பாஸ் வீடு இருக்காது: லாஸ்லியா ஆர்மி எச்சரிக்கை

    By Siva
    |

    சென்னை: பிக் பாஸ் 3 வீட்டில் லாஸ்லியா கோபப்பட்டு செல்லும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

    பிக் பாஸ் 3 வீட்டில் தினமும் சண்டை நடக்கிறது. பெண் போட்டியாளர்கள் தான் ஏதோ ஆயுள் முழுவதும் சேர்ந்து இருக்கப் போவது போன்று மோதிக் கொள்கிறார்கள்.

    இது வாழ்க்கை அல்ல வெறும் ஷோ என்பதை புரிந்து கொண்டு நடப்பவர்கள் ஆண் போட்டியாளர்கள் மட்டுமே.

    லாஸ்லியா

    பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்ததில் இருந்து தான் உண்டு தன் வேலை உண்டு என்று ஒதுங்கி இருக்கும் லாஸ்லியா கோபப்படுவது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. லாஸ்லியா ஒன்றும் செய்யாமல் மிக்சர் சாப்பிடத் தான் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார் என்று நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில் அவரை கடுப்பேற்றி பார்த்துள்ளார் பிக் பாஸ்.

     மீன் மார்க்கெட்

    மீன் மார்க்கெட்

    தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோவை பார்த்தால் அது பிக் பாஸ் வீடு போன்று தோன்றவில்லை. ஏதோ மீன் மார்க்கெட் போன்று உள்ளது. அந்த அளவுக்கு பெண் போட்டியாளர்கள் சண்டை போடுகிறார்கள். அதே சமயம் இந்த டுபாக்கூர் பாஸின் ப்ரொமோ வீடியோக்களையும் நம்ப முடியாது என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    லாஸ்லியா ஆர்மி

    லாஸ்லியா கோபமாக செல்வதை பார்த்த அவரின் ஆர்மிக்காரர்களோ, ஏன்டா எங்க தங்கத்தை கடுப்பேத்துறீங்க என்று புலம்புகிறார்கள். வழக்கமாக லாஸ்லியாவின் அழகை பாராட்டி ட்வீட் போட்டு நெட்டிசன்களை கடுப்பேற்றும் லாஸ்லியா ஆர்மியையே கடுப்பேற்றிவிட்டார் பிக் பாஸ் என்றால் பாருங்களேன்.

    மிரட்டல்

    லாஸ்லியா டென்ஷன் ஆனதை பார்த்து அவரின் ஆர்மியும் டென்ஷனாகியுள்ளது. தலைவியை கடுப்பேற்றினால் பிக் பாஸ் வீடே இருக்காது. தமிழ்நாடே கொந்தளிக்கும். தலைவியை திட்டிய அந்த 4 பேரும் எலிமினேஷனுக்கு வரட்டும் இருக்கு வேடிக்கை என்று லாஸ்லியா ஆர்மி மிரட்டல் விடுத்துள்ளது.

    English summary
    Bigg Boss 3 contestant Losliya is seen upset in a promo video released today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X