எப்பா.. லாஸ்லியா ஆர்மி, ஹேப்பியா இருங்கப்பா.. கவின காதலிக்கலயாம்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 24 : Promo 2 : கவினை கழட்டிவிட்ட 2 காதலிகள்- வீடியோ

சென்னை: லாஸ்லியா கவினை காதலிக்கவில்லை என சாக்ஷியிடம் கூறி சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின் வீட்டில் உள்ள அனைத்து பெண்களிடமும் கடலை போட்டு வருகின்றார். சமீபத்தில் சாக்ஷியை காதலிப்பதாக கூறினார்.இருவரும் பரஸ்பரம் காதலை பரிமாறிக்கொண்டனர்.

முதலில் அபிராமியுடன் நெருக்கமாக இருந்தார் கவின். பின்னர் சாக்ஷியுடன் நெருங்கி பழகினார். அந்த கேப்பில்தான் சாக்ஷியை காதலிக்க தொடங்கினார்.

சின்ன சின்ன சண்டைகள்

சின்ன சின்ன சண்டைகள்

ஆனாலும் கவின் கடலை போடுவதை மட்டும் நிறுத்தவில்லை. கவின் லாஸ்லியாவிடம் கடலை போடுவது சாக்ஷிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள் ஏற்பட்டு வந்தன.

கவின் சோகம்

கவின் சோகம்

கவினுடன் பேசுவதை குறைத்துக்கொண்டார் சாக்ஷி. நமக்குள் எதுவும் இல்லை என்றும் சமாதானம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறி கவினை ஓரங்கட்டினார் சாக்ஷி. இதனால் சோகமானார் கவின்.

கவினுடன் க்ளோஸ்

கவினுடன் க்ளோஸ்

ஆனால் லாஸ்லியாவும் கவினுடன் கதைப்பதை விரும்பினார். மற்ற ஹவுஸ் மேட்ஸ்களை காட்டிலும் கவினுடன் க்ளோஸாக இருந்தார் லாஸ்லியா.

எதுக்கு இந்த வேலை?

எதுக்கு இந்த வேலை?

இதனால் லாஸ்லியா ரசிகர்கள் கடுப்பாகினர். ஏன் கவின் பின்னாடி சுத்தி இந்தப் பெண் இப்படி தனது பெயரை கெடுத்துக்கொள்கிறாள், எதுக்கு இந்த வேலை என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

கவினை காதலிக்கவில்லை

கவினை காதலிக்கவில்லை

இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள புரமோவில் லாஸ்லியா சாக்ஷியிடம் நீங்கள் இரண்டு பேரும் எப்போதும் போலவே இருக்க வேண்டும். கவினுடன் எனக்கு இருப்பது நிச்சயம் காதல் இல்லை, அவரை பிடிக்கும் அவ்ளோதான் என்று கூறி சமாதானம் செய்கிறார்.

லாஸ்லியா ஆர்மி ஹேப்பி

லாஸ்லியா ஆர்மி ஹேப்பி

லாஸ்லியா கவினை காதலிக்கவில்லை என்று கூறியிருப்பது சாக்ஷிக்கு நிம்மதியோ என்னவோ தெரியவில்லை. நிச்சயம் ரசிகர்களுக்கும் லாஸ்லியா ஆர்மியினருக்கும் பெரும் சந்தோஷம்.

ஓவர் ஆக்ட் இல்லை

ஓவர் ஆக்ட் இல்லை

லாஸ்லியா பக்குவமான பொண்ணு எந்த சூழ்நிலையிலும் ஓவர் ஆக்ட் செய்யவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X