பர்த்டேக்கு கேக்கே வெட்டினது இல்லன்னு சொன்னீயேம்மா.. இதுக்கு பேரு என்ன? அம்பலமான லாஸ்லியாவின் பொய்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 62 : Losliya-வை காட்டமாக கத்திய Kamal- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா தனது பிறந்த நாளுக்கு கேக்கே வெட்டினது இல்லை என சொன்னது பொய் என்பது அம்பலமாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியா கவினை காதலித்து வருகிறார். இதனை அவர் வாயலேயே ஒப்புக்கொண்டுவிட்டார். ஆனால் கவின் தரப்பில் இருந்து உறுதியான பதில் இன்னும் கொடுக்கப்படவில்லை.

கவின் மீது ஆரம்பத்தில் இருந்தே ஒரு கண் வைத்திருந்த லாஸ்லியா, சாக்ஷியும் கவினும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் கவினுடன் நெருக்கமாக பழகி அவர்களின் காதலுக்கு வேட்டு வைத்தார்.

வெளியேறிய சாக்ஷி

வெளியேறிய சாக்ஷி

பின்னர் அதையே காரணமாக வைத்து சாக்ஷியை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற நாமினேட் செய்தார். லாஸ்லியா ஆசைப்படியே சாக்ஷி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

கதைக்க பிடிக்கும்

கதைக்க பிடிக்கும்

இதனால் கவினுடன் ஓவர் நெருக்கம் காட்டினார் லாஸ்லியா. சாக்ஷி இருந்தவரை கவின் தனக்கு ஃபிரண்டுதான், அவனை பிடிக்கும் அவனுடன் கதைக்க பிடிக்கும் என்று கூறிவந்தார்.

ரொம்ப பிடிக்கிறது

ரொம்ப பிடிக்கிறது

சாக்ஷி போன பிறகு கவினை முன்பு பிடித்தது இப்போது ரொம்ப பிடிக்கிறது என்று கூறிவருகிறார். இந்த வாரம் முழுவதும் கவின் - லாஸ்லியா காதல் காவியத்தையே போட்டு அலுப்பை ஏற்படுத்தினர்.

கவின் கேட்ட கேள்வி

கவின் கேட்ட கேள்வி

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கவினும் லாஸ்லியாவும் வழக்கமான இடத்தில் உட்காந்து தனிமையில் பேசினர். அப்போது லாஸ்லியாவிடம் பர்த்டேவெல்லாம் எப்படி செலிபிரேட் பண்ணுவீங்க என்று கேட்டார் கவின்.

ஆனா எனக்கு ஆசை

ஆனா எனக்கு ஆசை

உடனே பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு எனக்கு கேக் வெட்டி செலிபிரேட் பண்ண ஆசைடா, ஆனால் எங்கள் வீட்டில் கேக் வெட்ட மாட்டார்கள். என் தங்கைகளுக்கெல்லாம் கேக் வெட்டுவார்கள் நான் பெரிய பெண் என்பதால் எனக்கு கேக் வெட்டமாட்டார்கள் என்று கூறினார்.

பொய் சொன்ன லாஸ்லியா

பொய் சொன்ன லாஸ்லியா

மேலும் தான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது தன்னுடன் படித்த மாணவன் ஒருவன் எங்கள் வீட்டிற்கு வந்து கேக் வெட்ட சொன்னதாகவும் கூறி பரிதாபத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் லாஸ்லியா நேற்று கூறியது பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

காஸ்ட்லி கொண்டாட்டம்

காஸ்ட்லி கொண்டாட்டம்

லாஸ்லியா கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதில் ராணி போல் கவுன் அணிந்து அலங்கரிக்கப்பட்ட ஹாலில் கடந்த ஆண்டு மிக காஸ்ட்லியாக பிறந்த நாள் கொண்டாடியது தெரியவந்துள்ளது.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

மேலும் அவர் தனது அலுவலக ஊழியர்களுடன் பிக்பாஸ் 5ஸ்டார் ஹோட்டலில் பிறந்த நாள் கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டு அவரது நண்பர்களே திட்டியுள்ளனர். இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் லாஸ்லியாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X