லாஸ்லியா மேல கோவமா இருக்காரோ அப்பா? ஏறேடுத்து பார்க்கலையே! முகத்துல சந்தோஷத்தையே காணோமே!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 80 : Losliya crying for cheran

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள லாஸ்லியாவின் அப்பா அவரை ஏறெடுத்துக் கூட பார்க்காததால், கோபத்தில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது. அதன்படி ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து தங்களின் உறவை பார்த்து செல்கின்றனர்.

இதனால் பிக்பாஸ் வீடு உணர்ச்சி பிழம்பாக காட்சியளிக்கிறது. நேற்று முகெனின் அம்மாவும் தங்கச்சியும் வந்த நிலையில் இன்று லாஸ்லியாவின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருப்பது புரமோவில் தெரியவந்துள்ளது.

பார்க்கவேயில்லை

பார்க்கவேயில்லை

அந்த புரமோவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் தனது அப்பாவை கட்டியணைத்து கதறி அழுகிறார். ஆனால் லாஸ்லியாவின் அப்பாவோ அவரை ஏறேடுத்துக்கூட பார்க்கவில்லை.

லாஸ்லியா மீது கோபம்

லாஸ்லியா மீது கோபம்

கவினுடனான காதலால் லாஸ்லியா தனது பெயரைக் கெடுத்துக்கொண்டார். இதனால் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்கும் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளானார். இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் லாஸ்லியாவின் தந்தை அவர் மீது கோபத்தில் இருக்கலாம் என நெட்டிசன்கள் கருதி வருகின்றனர்.

பூஜை உறுதி

மனுஷன் செம காண்டுல வந்துருக்காரு.. இன்னிக்கு கவினுக்கு பூஜை உறுதி என்கிறார் இந்த நெட்டிசன்.

அப்பா ஓரங்கட்டுராரு

என்னடா மூணு நாலு சீக்ரெட் ரூம்ல இருந்த சேரன், சக்ர கட்டினு கொஞ்சி ஸ்மைலோட ஹக் பண்ணாரு ,10 வருஷம் கழிச்சி பாக்குற அப்பா சைடு வாங்கி போயிகிட்டு இருக்காரு, ஓகே எதுவா இருந்தாலும் எபிசொட் பாத்து முடிவு பண்ணிப்போம்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கோபமாக இருக்கிறார்

லாஸ்லியா அப்பா அவர் மீது கோபமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். நிஜமாவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, கவினோடு சேர்ந்து அவளோட பேரை கெடுத்துக்கிட்டா லாஸ்லியா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

சந்தோஷமே இல்ல

ஏன் அவர் பார்க்கவேயில்லை? பத்து வருடங்களுக்குப் பிறகு மகளை பார்க்கிறார் சிரிப்பு, சந்தோஷம், உணர்ச்சி என எதுவுமே இல்லையே என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

பொண்ணு பண்ண காரியம்

பொண்ணை பாத்த சந்தோசமே அவர் முகத்துல காணோம் பாவம். பொண்ணு பண்ண காரியம் அப்படி. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X