காதலில் மூழ்கிய லாஸ்லியா.. குடும்பத்தை ஞாபகப்படுத்த தனது போட்டோவை அனுப்பிய ஒரிஜினல் அப்பா!

Recommended Video

Bigg Boss 3 Tamil Unseen : காதல் கடிதம் எழுதும் லாஸ்

சென்னை: காதலில் லயித்திருக்கும் லாஸ்லியாவுக்கு தன்னை ஞாபகப்படுத்தும் வகையில் தனது போட்டோவை அனுப்பியுள்ளார் அவர் ஒரிஜினல் அப்பா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் லாஸ்லியா இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு ஆரம்பத்தில் கவினுடன் நட்பாக இருந்தார். ஆனால் கவினை பிடிக்கும், அவருடன் கதைக்க பிடிக்கும் என்றார்.

சாக்ஷியும் கவினும் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தும் அவருடன் நெருக்கம் காட்டினார். சாக்ஷி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு கவினுடனான காதலை ஒப்புக்கொண்ட லாஸ்லியா, வெளியே போனபிறகுதான், தங்களின் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றார்.

எச்சரித்த கமல்

எச்சரித்த கமல்

எப்போதும் கவினுடன் கடலை போடுவது, இருவரும் டபுள் மீனிங்கில் பேசுவது, கையை பிடிப்பது, காலைபிடிப்பது என அத்துமீறி வந்தனர். நள்ளிரவில் மைக்கின் பேட்டரியை கழட்டிவிட்டு பேசும் அளவுக்கு அவர்களுக்குள் காதல் தீவிரமானது. இதனை விளக்கப்படமாக போட்டு எச்சரித்தார் கமல்.

கோபப்பட்ட அப்பா

கோபப்பட்ட அப்பா

ஆனாலும் அடங்காத லாஸ்லியா, கவின்தான் உண்மையான பாசத்தை காட்டுகிறார். சேரப்பா நடிக்கிறார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இதனால் பார்வையாளர்கள் கடுப்பாகினர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியாவின் அப்பா, உன்னை காதலிக்கவா பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பினேன் என கடுமையாக கோபப்பட்டார்.

தொடரும் காதல்

தொடரும் காதல்

பத்து வருடங்களுக்குப் பிறகு மகளை பார்த்தும், அவர் முகத்தை கூட பார்க்காமல் செய்வது தவறு என திருத்திக்கொள்ளுமாறு கடுமையாக கூறினார் லாஸ்லியாவின் அப்பா. அப்போதெல்லாம் சரி சரி என தலையை ஆட்டிய லாஸ்லியா, அவர் அந்தப்பக்கம் போனதும் இந்தப்பக்கம் கவினுடன் காதலை தொடர்ந்து வருகிறார்.

அப்பா கொடுத்த கிஃப்ட்

அப்பா கொடுத்த கிஃப்ட்

யார் சொல்லியும் அவர் கேட்பதாக தெரியவில்லை. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மகத்தும், யாஷிகாவும் டாஸ்க்கில் கவனம் செலுத்துமாறு அவர்களுக்கு அட்வைஸ் செய்தனர். மேலும் எல்லோருக்கும் பிக்பாஸ் கிஃப்ட் கொடுத்ததாக கூறிய அவர்கள், லாஸ்லியாவுக்கு அவரது அப்பா ஒரு கிஃப்ட்டை கொடுக்க சொன்னதாக கூறி, அவரது ஃபோட்டோவை கொடுத்தனர்.

ஞாபகப்படுத்தவே..

பெற்றோர் வந்து சென்ற பிறகு, தனது பெற்றோர் விருப்பப்படியே இருக்கப்போவதாக கூறினார். ஆனால் கவினுடன்தான் அதிக நேரம் செலவழித்து வருகிறார். பெற்றோர் சொன்னதை மறந்துவிட்டது போல் தெரிகிறது. இந்நிலையில் தன்னை ஞாபகப்படுத்தும் வகையில் தனது போட்டோவை அனுப்பியிருக்கிறார் லாஸ்லியாவின் அப்பா என்று கூறுகின்றனர் பார்வையாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X