என்னைப்பத்தி உனக்கு தெரியும்ல.. வீடியோ காலிலும் மிரட்டிய அப்பா! கண்ணீரே வராமல் அழுத லாஸ்லியா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா நேற்று தனது அப்பாவுடன் வீடியோ காலில் பேசினார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து விட்டது. 100 நாட்கள் வரை டாஸ்க், செல்ப் ரேட்டிங் என நாட்களை நகர்த்தி வந்தார் பிக்பாஸ்.
இந்நிலையில் நாளையுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் டாஸ்க் ஏதும் நடத்த முடியாமல் எப்படி நாட்களை நகர்த்துகிறது என தெரியாமல் திணறி வருகிறார்.

மீண்டும் அழைத்து வந்து
இதற்காக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஹவுஸ்மேட்ஸ்களை மீண்டும் அழைத்து வருவது, பழைய போட்டோக்களை வைத்து, அந்த நினைவுகளை பகிர்வது என நாட்களை கடத்தி வருகிறார்.

வீடியோ காலில்
இதன் ஒரு பகுதியாக நேற்றைய எபிசோடில் ஃபைனலுக்கு தகுதி பெற்ற போட்டியாளர்களை அவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச வைத்தார் பிக்பாஸ். இதனைத்தொடர்ந்து போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினருடன் போனில் பேசினர்.

உங்களுக்கு தெரியும் தானே
இதனைத் தொடர்ந்து லாஸ்லியா, தனது அப்பாவுடன் பேசினார். அப்போது தனது குடும்பத்தினர் குறித்து நலம் விசாரித்த லாஸ்லியா, அப்பா சாரி நீங்க எதுவும் நினைக்காதீங்க. நான் எல்லாமே வெளியே வந்த பேசுகிறேன். யார் சொல்வதையும் கேட்காதீங்க, என்னைப்பற்றி உங்களுக்கு தெரியும் தானே என்றார்.

ஒழுங்கா விளையாடிட்டு வா
அதற்கு பதிலளித்த அவரது அப்பா, என்னைப்பற்றி உனக்கு தெரியும் தானே என்று நச்சென திருப்பிக்கேட்டார். மேலும் இப்போது போலவே இரு, நீ வளர்ந்த விதத்தை நினைத்து பார்த்து ஒழுங்கா விளையாடிட்டு வா என்றும் கூறினார்.

கண்ணீர் வரவில்லை
இதனைத்தொடர்ந்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறிய லாஸ்லியா, பை பை என்றபடியே அழுதார். ஆனால் கண்ணில் ஒரு சொட்டுக் கூட கண்ணீர் வரவில்லை. இதனை க்ளோஸப் வைத்து காட்டினார் பிக்பாஸ்.

அப்பாவிடமே நடிப்பு
இதனை பார்த்த நெட்டிசன்கள், அதெப்படி லாஸ்லியா கண்ணீரே வராமல் அழுகிறாய் என்றனர். மேலும், அப்பாவிடமே அழுவது போல நடிக்கிறாளே என்றும் திட்டி தீர்த்தனர்.
ஒய் லாஸ்?
கண்ணுல தண்ணியே வராம அழுவுது..!! ஒய் லாஸ்..!! என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











