Bigg Boss 3: திமிராக பேசி கமலிடம் நோஸ்கட் வாங்கிய லாஸ்லியா
சென்னை: பிக் பாஸ் ப்ரொமோ வீடியோவில் கமல் ஹாஸனிடம் திமிராக பேசி நோஸ்கட் வாங்கியுள்ளார் லாஸ்லியா.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்த புதிதில் அமைதியாக இருந்த லாஸ்லியாவுக்கு கவின் மீது காதல் வந்தது. அதன் பிறகு அவரை பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும் கமல் ஹாஸன் முன்பு கால் மீது கால் போட்டு அதை ஆட்டிக் கொண்டே பேசுவதும் பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் வெளியாகியுள்ள ப்ரொமோ வீடியோ பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
கமல்
நான் நிறைய விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறேன், ஃபீலிங்ஸ். அது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது என்பது சந்தேகமாக உள்ளது. ஒரு விஷயத்தை பொதுவாக சொன்னால் நான் ஏற்றுக் கொள்வேன் என்று லாஸ்லியா கூற கமல், பொதுவாகத் தான் சொன்னேன், நான் பெயர் எதுவுமே சொல்லவில்லையே என்று கூற அரங்கம் அதிரும் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

சுற்றுலாத்தலம்
பிக் பாஸ் என்பது போட்டிதளம் இதை ஒரு சுற்றுலாத்தலமாக மாத்திக்காதீங்க நீங்க என்று கமல் கூறியதும் லாஸ்லியாவுக்கு முகமே விளங்கவில்லை. உள்ளே போகும் போது யாரையுமே தெரியாது அல்லவா, அப்படியே நினைத்துக் கொண்டு செயல்படுங்க, பொதுவாக சொல்கிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.
நோஸ்கட்
கமல் லாஸ்லியாவுக்கு நோஸ்கட் கொடுத்துள்ளது பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு பிடித்துள்ளது. லாஸ்லியா கமலிடமே பொய் சொல்கிறார். பிக் பாஸ் வீட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் கேமரா இருப்பதை மறந்துவிட்டு பேசுகிறார் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
டாஸ்க்
பிக் பாஸ் பார்வையாளர்கள் பலருக்கும் பிடிக்காத போட்டியாளராகிவிட்டார் லாஸ்லியா. டாஸ்க் கொடுத்துக் கொண்டே இருந்தால் லாஸ்லியா, கவினுக்கு எல்லாம் நாள் முழுக்க கடலை போட நேரம் இருக்குமா என்கிறார்கள் பார்வையாளர்கள். முதலில் ஒழுங்கான டாஸ்குகளை கொடுங்க என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











