மூன்றாம் இடத்தை பிடித்த லாஸ்லியா.. அசத்தலாக அழைத்து வந்த ஸ்ருதி ஹாசன்!

Recommended Video

Losliya Bigg Boss Winner : ட்விட்டரில் தெறிக்கும் லொஸ்லியா Hashtag

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா ஃபைனல்ஸில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவரை ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் வீட்டில் இருந்து அசத்தலாக அழைத்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியா இலங்கையை சேர்ந்த தமிழர் ஆவார். செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த அவருக்கு இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

வந்த புதிதில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தார் லாஸ்லியா. இதனால் மக்களின் மனதில் இடம்பிடித்தார்.

ஆட்டிட்யூட்

ஆட்டிட்யூட்

ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவரின் சுயரூபம் தெரிய வந்தது. சக போட்டியாளர்களிடம் மிகவும் திமிராக நடந்துகொண்டார். ஆட்டிட்யூட் காட்டினார் லாஸ்லியா.

கவின் மீது காதல்

கவின் மீது காதல்

போதாகுறைக்கு கவினுடன் கடலை, காதல் என பெயரைக் கெடுத்துக்கொண்டார். கவின் சாக்ஷியை காதலிக்கிறார் என்று தெரிந்தும் லாஸ்லியா கவினை காதலிக்கத் தொடங்கினார். முதலில் நட்பு என்று கூறிய லாஸ்லியா, சாக்ஷி வெளியேறிய பிறது கவின் மீது இருப்பது காதல் என பிரகடனப்படுத்தினார்.

அரோகென்ட்

அரோகென்ட்

கவின் மீது கொண்ட காதலால் அப்பா என்று அழைத்த சேரனின் பாசத்தை சந்தேகப்பட்ட லாஸ்லியா, அவரையே ஓரங்கட்டினார். யார் என்ன பேசினாலும் வயது வித்தியாசமின்றி பதிலடி கொடுத்த லாஸ்லியா மிகவும் அரோகென்ட்டாக நடந்து கொண்டார்.

கடுப்புக்கு ஆளானார்

கடுப்புக்கு ஆளானார்

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த தனது சொந்த அப்பா, கவினுடனான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் கவினுடனான காதலை அவர் கைவிடவில்லை. இதனால் மக்களின் கடுப்புக்கு ஆளானார்.

தர்ஷன் வெளியேற்றம்

தர்ஷன் வெளியேற்றம்

ஆனால் கவின், பிக்பாஸ் வீட்டில் இருந்து பணத்துடன் வெளியே சென்ற பிறகு, கவின் ஆதரவாளர்களும் போட்ட ஓட்டால் ஒரேடியாக டாப்புக்கு போனார் லாஸ்லியா. இதனால் குறைந்த வாக்குகளை பெற்ற தர்ஷன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

டிவிட்டரில் ஒரு பக்கம் லாஸ்லியாவை கழுவி ஊற்றினாலும், கவினுக்காக விஜய் டிவி லாஸ்லியா வின்னர் ஆக்கிவிடும் என்றும் கூறப்பட்டது. ஏற்கனவே லாஸ்லியா மீது கடுப்பில் இருந்த மக்கள் இப்படி ஒரு தகவல் பரவியதால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் இருந்தனர்.

லாஸ்க்கு 3வது இடம்

லாஸ்க்கு 3வது இடம்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து இன்று ஃபைனலை கொண்டாடுகிறது. இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற 4 போட்டியாளர்களில் ஷெரின் ஏற்கனவே வெளியே அழைத்து வரப்பட்ட நிலையில் மூன்றாவது இடத்தை பிடித்து லாஸ்லியா வெளியேறியிருக்கிறார். அவரை கமலின் மகளான ஸ்ருதிஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று வெளியே அழைத்து வந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X