லாஸ்லியா ஆர்மி தெரியும், இப்படி ஒரு சங்கம் இருப்பது தெரியுமோ?
சென்னை: பிக் பாஸ் 3 போட்டியாளர் லாஸ்லியாவுக்காக ட்விட்டரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் 3 வீட்டிற்கு வந்தபோது அழகாக இருப்பதற்காக லாஸ்லியாவுக்கு ட்விட்டரில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்கள் வெளியானால் உடனே லாஸ்லியா சோ க்யூட், அழகி என்று அவரின் ஆர்மிக்காரர்கள் பாராட்டி, பாராட்டி மற்றவர்களை கடுப்பேற்றினார்கள்.
முக்கோண காதல் கதையில் ஒரு ஆளான பிறகு லாஸ்லியாவை பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது.
சங்கம்
கவினை காதலிக்கும்(காதலிப்பது போன்று நடந்து கொள்ளும்) சாக்ஷி ஸ்நேக்சியானது போன்று லாஸ்லியா கக்கூஸ்லியா, லூஸ்லியாவாகிவிட்டார். இந்நிலையில் ட்விட்டரில் லாஸ்லியா ஹேட்டர்ஸ் சங்கம் உருவாகியுள்ளது. அந்த சங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். லாஸ்லியாவின் சமீபத்திய செயல்கள் பலருக்கும் பிடிக்காத நிலையில் இப்படி ஒரு சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
மரியாதை
லாஸ்லியா கமல் ஹாஸன் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்ததுடன், காலாட்டிக் கொண்டே பேசியுள்ளார். லாஸ்லியா ஆர்மிக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரியாது. ஆனால் ஹேட்டர்ஸ் சங்கமும், லாஸ்லியாவை பிடிக்காதவர்களும் அவரின் முகத்தை பார்க்காமல் காலை தான் பார்த்து விமர்சித்துள்ளனர்.
பார்வையாளர்கள்
இந்த மீம் ஹேட்டர்ஸ் சங்க பக்கத்தில் போட்டிருந்தாலும் பிக் பாஸ் 3 பார்வையாளர்களின் மனநிலையை காட்டுகிறது. கவின், சாக்ஷி, லாஸ்லியா தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள் என்று தான் பார்வையாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். முக்கோண காதல் கதை தப்பில்லை. ஆனால் அதையே ஜவ்வாக வைத்து இழுத்துக் கொண்டிருப்பது தான் தப்பு. நாங்க எல்லாம் பாவம், பிக் பாஸ்.
டாஸ்க்
லாஸ்லியா பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து கவினை காதலித்து சீன் போடுவதை தவிர வேறு எதையும் பெரிதாக செய்யவில்லை. பிக் பாஸ் வீடே பற்றி எரிந்தாலும் ஓரமாக அமர்ந்து மிக்சர் சாப்பிடும் ஸ்ட்ராடஜியை பயன்படுத்துகிறார் லாஸ்லியா. அதனால் அவருக்கு பிக் பாஸ் டைட்டிலை வெல்லும் ஆசை எல்லாம் இருக்கவே கூடாது என்கிறார்கள் பார்வையாளர்கள்.


Click it and Unblock the Notifications











