கவினுடன் தொடர்ந்து கடலை போட்ட லாஸ்லியா.. தங்க முட்டையை கோட்டை விட்ட பரிதாபம்.. வட போச்சே!
Recommended Video
சென்னை: கவினுடன் ஓரங்கட்டி தீவிரமாக கடலை போட்டதால் லாஸ்லியா தனது தங்க முட்டையை கோட்டைவிட்டார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை நடத்தி வருகிறார் பிக்பாஸ்.
இதில் கொடுக்கப்படும் பத்து டாஸ்க்குகளில் அதிக பாயின்ட்ஸ் பெறும் போட்டியாளர்கள் டைரக்ட் ஃபைனலுக்கு தகுதி பெறுவார்கள். இதன்காரணமாக போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர்.

தங்க முட்டை டாஸ்க்
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பிக்பாஸ் வீட்டில் தங்கமுட்டை டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்தது. இதில் ஷெரின், சேரன் உள்ளிட்டோரின் தங்க முட்டைகள் ஏற்கனவே உடைக்கப்பட்டு விட்டன.

ஓரங்கட்டி கடலை
இந்நிலையில், நேற்று லாஸ்லியா மற்றும் கவினின் முட்டைகள் எஞ்சியிருந்தன. இதற்கு காவல் காக்கும் வகையில் கவினும் லாஸ்லியாவும் மழைசாரலில் போர்வையை போர்த்தியபடி ஓரங்கட்டி கடலை போட்டு வந்தனர்.

தூள் கிளப்பிய தர்ஷன்
அவர்கள் தீவிரமாக கடலை போட்டதை நோட்டம் விட்ட தர்ஷன் கண்ணிமைக்கும் நேரத்தில் லாஸ்லியாவின் தங்க முட்டையை எடுத்துப் போட்டு உடைத்தார். யார் உடைத்தார்கள் என்று கூட லாஸ்லியாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிரித்தப்படியே சமாளித்த லாஸ்
முட்டை உடைக்கப்பட்ட சத்தத்தைக் கேட்டு ஆவென வாயை திறந்தப்படி பார்த்தார். பின்னர் அந்த அதிர்ச்சியில் மெல்ல மீண்டு சிரித்தப்படியே சமாளித்து எழுந்து சென்றார் லாஸ்லியா.

எடுத்துப்போட்டு உடைத்த கவின்
ஆக கவினுடன் கடலை போட்டு தங்க முட்டையை கோட்டை விட்டுவிட்டார் லாஸ்லியா. இதனைத்தொடர்ந்து கவின் தனது முட்டையை எடுத்துப்போட்டு உடைத்துவிட்டு உள்ளே சென்றார். தங்க முட்டையை பாதுகாக்கும் சாக்கில் இருவரும் கடலை போட்டதுதான் மிச்சம்!


Click it and Unblock the Notifications











