வச்சுட்டாங்கள்ல ஆப்பு.. ஓவரா திமிர் காட்டினா இப்படிதான்.. முதல் முறையாக நாமினேஷனுக்கு வந்த 'அவர்'!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா முதல் முறையாக நாமினேஷனுக்கு வந்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா வந்த புதிதில் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தார். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தார் லாஸ்லியா.
யாரைப்பற்றியும் பின்னால் பேசாமல் இருந்தார். இதனால் பிக்பாஸ் வீட்டிற்குள் அவர் நுழைந்தவுடனேயே அவருக்கு ஆர்மி தொடங்கப்பட்டுவிட்டது.

திமிர் காட்டிய லாஸ்
ஆனால் நாளாக நாளாக அவரது உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது. ஓவர் ஆட்டிட்டியூட் காட்டி வருகிறார். கமல் பங்கேற்கும் எபிசோடின் போது லாஸ்லியாவுக்கு கைத்தட்டல்கள் அதிகமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நமக்குதான் செல்வாக்கு அதிகம் என்று நினைத்து திமிர் காட்ட தொடங்கினார்.

வலிய போய் வழியும் லாஸ்
அதுமட்டுமின்றி கவினுக்கும் சாக்ஷிக்கு காதல் என்று தெரிந்தும் கூட கவினிடம் வலிய சென்று வழிந்து வருகிறார். இதனால் அவரது ஆர்மியினரே அவரை எதிர்க்க தொடங்கிவிட்டனர்.

காதல் பைத்தியம் முற்றிவிட்டது
கவினை யாருக்கெல்லாம் பிடிக்கவில்லையோ அவர்களையெல்லாம் லாஸ்லியா நாமினேட் செய்து வருகிறார். அந்தளவுக்கு கவின் மீது அவருக்கு காதல் பைத்தியம் முற்றிவிட்டது.

மிக்ஸர் சாப்பிடும் லாஸ்
இயக்குநர் சேரனை, அப்பா அப்பா என கூறி வரும் லாஸ்லியா, சேரனுக்கு ஒரு பிரச்சனை என்றால் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். தன் மீது எந்த தப்பும் வந்துவிடக்கூடாது என்பதால் சேரனின் பிரச்சனைக்கு கூட குரல் கொடுக்காமல் மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

லூஸ்லியா ஆர்மி
லாஸ்லியாவை லூஸ்லியா என்றே சமூக வலைதளங்களில் அழைத்து வருகின்றனர். மேலும் லூஸ்லியா ஆர்மி என்ற பெயரில் ஆர்மி ஒன்றையும் உருவாக்கி, அவரை கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.

நாமினேஷன்
லாஸ்லியாவின், ஆட்டிட்யூட், ஆணவம், திமிர் உள்ளிட்டவற்றால் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அவர் மீது வெறுப்பில் உள்ளனர். குறிப்பாக ஷெரின், சாக்ஷி ஆகியோர் லாஸ்லியா மீது செம காண்டில் இருந்தனர். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் நாமினேஷன் நடைபெறுவது இன்றைய புரமோவில் தெரியவந்துள்ளது.

லாஸ்லியாவின் பெயர்
கடந்த வாரம் போன்று இல்லாமல் இந்த வாரம் ரகசிய நாமினேஷன் தான் நடைபெறுகிறது. இதில் லாஸ்லியாவின் பெயரை ஷெரின், சாக்ஷி, சரவணன் ஆகியோர் நாமினேட் செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 43 நாட்கள் கடந்துள்ள நிலையில் தற்போது முதல் முறையாக லாஸ்லியாவின் பெயர் நாமினேஷனுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











