எங்க எமோஷன்ஸ் கூட கேம் விளையாடியிருக்க கவின்.. நாக்கப்புடுங்கற மாதிரி நச்சுன்னு கேட்ட லாஸ்லியா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் காதல் நாயகனாக வலம் வரும் கவினை நாக்கப்புடுங்கற மாதிரி லாஸ்லியா கேள்வி கேட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த நாள் முதலே காதல் நாயகனாக வலம் வருகிறார் கவின். ஷெரின், அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா என அனைவரிடமும் கடலை போட்டு வந்தார்.
ஒரு வழியாக சாக்ஷியுடன் காதல் என கமிட் ஆனார் கவின். இருவரும் மாறி மாறி காதலை புரபோஸ் செய்துக்கொண்டனர். ஆனால் கொஞ்சம் செல்ப் கன்ட்ரோல் இல்லாத கவின், லாஸ்லியாவிடம் நெருங்கி பழகினார்.

சாக்ஷி காதல்
வார்த்தைக்கு வார்த்தை உன்னை பிடிக்கும் பிடிக்கும் என்று லாஸ்லியாவிடம் கூறிய கவின், சாக்ஷியுடனான காதல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதனால் எல்லோரிடமும் ஒரே மாதிரியாகதான் கவின் பழகுகிறார் என்று நினைத்த லாஸ்லியா, கவினை நேசிக்க தொடங்கினார்.

யாரை செலக்ட் செய்வது?
அப்போதும் கவின் சாக்ஷியை காதலிக்கும் விஷயத்தை சொல்லவே இல்லை. கவின் லாஸ்லியாவிடம் நெருங்கிப்பழகுவது பிடிக்காமல் பொஸஸிவில் சண்டைபோட்ட சாக்ஷி, என்னிடம் பேசாதே என்று கூறினார். யாரை செலக்ட் செய்வது என்ற குழம்பிய கவின் இரண்டு பேரையும் ஓட்டினார்.

அலர்ட்டான லாஸ்லியா
ஒரு கட்டத்தில் லாஸ்லியாவிடம் நெருங்கி பழக பழக சாக்ஷியை விட்டு விலகினார் கவின். இந்நிலையில் கவினின் உண்மை முகம் தெரியவர அலர்ட்டான லாஸ்லியா கவினைவிட்டு விலகினார்.

அழுத கவின்
vநேற்றைய எபிசோடில் அனைவரிடமும் மன்னிப்பு கேட்ட கவின், பாத்ரூமுக்குள் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார். மற்றவர்கள் காதில் கேட்டு வந்து என்ன என கேட்கும் வரை அழுதபடியே இருந்தார் கவின்.

ஏன் சொல்லவில்லை?
இதைத்தொடர்ந்து கவினும் லாஸ்லியாவும் தனியாக அமர்ந்து பேசினர். அப்போது நீ சாக்ஷியுடன் இவ்ளோ க்ளோஸாக இருந்தது எனக்கு தெரியாது. ஏன் அதை என்னிடம் சொல்லாமல், உன்னை பிடிக்கும் பிடிக்கும் என என்னிடமும் அதேபோல் பேசினாய்?

நடிப்பது போல் தெரிகிறது
எங்கள் எமோஷன்ஸ் கூட விளையாடியிருக்கிறாய். நீ நல்லா கேம் ஆடியிருக்கிறாய். நீ இப்போது மன்னிப்பு கேட்பது கூட நடிப்பது போல் இருக்கிறது. இதைக்கூட நம்ப முடியவில்லை என கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார் லாஸ்லியா.

நாக்கப் புடுங்கற மாதிரி
இதைத்தொடர்ந்து கவின், சாக்ஷி ஷெரினிடம் பேசியபோது திரும்பிக் கூட பார்க்கவில்லை லாஸ்லியா. ஒரு வழியாக கவினின் உண்மை முகம் லாஸ்லியாவுக்கு தெரிந்துவிட்டது. அவரும் நச்சு நச்சென நாக்கப் புடுங்கற மாதிரி கேட்டார் லாஸ்லியா. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











