இது புதுசாவுல இருக்கு..சாக்ஷிக்கு நடந்த அநியாயத்துக்கு நான்தான் பொறுப்பு.. லாஸ்லியா கண்ணீர்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் - சாக்ஷி காதல் முறிவுக்கு நான்தான் பொறுப்பு என கூறி கண்ணீர் விட்டுள்ளார் லாஸ்லியா.
பிக்பாஸ் வீட்டில் சண்டக்கோழியாக சுற்றிவந்த வனிதா விஜயக்குமார் வெளியேற்றப்பட்ட பிறகு நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்தது. ஆனால் அந்த இடத்திற்கு தன்னை ரீபிளேசாக்க முயற்சித்த மீரா மிதுன், இயக்குநர் சேரன் மீது தவறான நோக்கத்தில் இடுப்பை பிடித்தார் என பொய் குற்றச்சாட்டை கூறினார்.
இதனால் நிகழ்ச்சி சூடுபிடித்தது. மீரா மிதுன், கவின் - சாக்ஷி - லாஸ்லியாவின் முக்கோண காதல் கதையை வைத்து நிகழ்ச்சியை நகர்த்தி வந்தார் பிக்பாஸ்.

டேக் ஓவர் செய்த பிக்பாஸ்
இதில் மீரா மிதுனும் கடந்த வாரம் வெளியேற்றப்பட கவின்- சாக்ஷி- லாஸ்லியாவை வைத்து ஓட்டப்பட்டு வந்தது பிக்பாஸ். வனிதா, மீரா மிதுன் வெளியேறியதை தொடர்ந்து, ஓபன் நாமினேஷன் கொடுத்து அவர்களின் வேலையை டேக் ஓவர் செய்தார் பிக்பாஸ்.

லாஸ்லியா ஆட்டிட்யூட்
நேற்றைய மொட்ட கடுதாசி டாஸ்க்கின் போது, கவின், சாக்ஷி, லாஸ்லியா இடையே பிரச்சனை ஏற்பட்டது. நேற்றைய எபிசோடில் கவினுக்கும் எனக்கும் இடையிலான ஃபிரன்ட்ஷிப் குறித்து யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறி ஆட்டிட்யூட் காட்டினார் லாஸ்லியா.

என்னை ஏமாற்றுகிறாள்
இதனால் சாக்ஷி கண்ணீர் விட்டு அழுதார். இந்நிலையில் இன்று வெளியான புரமோவில் சாக்ஷி வேற மாதிரி ஆகிவிட்டால், என்னை காலி பண்ணுகிறாள் என்று எனக்கு தெரிகிறது. அவள் என்னை ஏமாற்றுகிறாள் என்று கூறுகிறார் கவின்.

காதில் வாங்காத கவின்
இதுதொடர்பாக அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களும் கவினுக்கு அட்வைஸ் செய்கின்றனர். ஆனால் கவின் அதனை காதில் வாங்கவில்லை. சாக்ஷியுடன் பேச விரும்பவில்லை என்று கூறுகிறார் கவின்.

நான்தான் பொறுப்பு
அவரை தொடர்ந்து அனைவரின் முன்பும் சாக்ஷிக்கு நடந்த அநியாயத்துக்கு நான்தான் பொறுப்பு, தயவு செய்து என்னிடம் யாரும் கதைக்காதீங்க, உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ் என்று கையெடுத்து கும்பிடுகிறார் லாஸ்லியா.

ஆச்சரியம்
நேற்று அப்படி ஒரு ஆட்டியூட்டை காட்டிய லாஸ்லியா இன்று எல்லோரின் முன்பும் கண்ணீர் விடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தான் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிறாரா கமல்ஹாசன்.


Click it and Unblock the Notifications











