அய்யயோ.. சாக்ஷிக்கும் லாஸ்லியாவுக்கும் பயங்கர சண்டை.. அதே வீடே வேடிக்கை பாக்குது!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 75 : Losliya angry over sakshi

சென்னை: பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவுக்கும் சாக்ஷிக்கும் இடையே பயங்கர சண்டை நடைபெறுகிறது.

பிக்பாஸ் வீட்டில் விருந்தாளிகளாக சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் வந்த நாள் முதலே நிகழ்ச்சியில் சுவாரசியம் பற்றிக்கொண்டது.

இந்நிலையில் இன்றைய முதல் புரமோவில் லாஸ்லியாவுக்கு பச்சோந்தி அவார்டு கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை வாங்கிய கையோடு தூக்கி எறிந்துவிட்டார் லாஸ்லியா.

பெரும் சண்டை

பெரும் சண்டை

இதனை மோகன் வைத்யா கண்டித்தும் அவர் மதிக்காமல் சென்று கவின் பக்கத்தில் போய் உட்காந்து கொண்டார். இந்நிலையில் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் சாக்ஷிக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே பெரும் சண்டை நடைபெறுகிறது.

டீசன்ஸி இருக்குல்ல

டீசன்ஸி இருக்குல்ல

அப்போது மோகன் வைத்யா, எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்கிறோம், வேண்டாம் என்றால் நீங்க அங்கே கொண்டு போய் போடனும் என்று கூறுகிறார். சாக்ஷி டீசன்ஸி இருக்குல்ல என்று கேட்கிறார்.

உன்னிடம் பேசவில்லை

உன்னிடம் பேசவில்லை

உடனே நீங்க எனக்கு டீச் பண்ணாதீங்க என்று கூறுகிறார் லாஸ்லியா. அதற்கு நான் உன்னிடம் பேசவில்லை என்கிறார் சாக்ஷி. நீங்க என்ன பாத்துதான் கதைக்கிறீங்க என்று கூறுகிறார் லாஸ்லியா. நான் கேமராவிடம் பேசுகிறேன் என்றார் சாக்ஷி.

ஷட் அப்

ஷட் அப்

விடாத லாஸ்லியா கேமராக்கிட்ட பேசனும்ன்னா அங்கபோய் பேசுங்க என்று கூறும் பயங்கரமாக கத்தி நீ வா போ என்று பேசாதீங்க என கத்துகிறார். முதலில் மோகன் வைத்யா சாரின் வயதுக்கு மரியாதை கொடு நீ என்று சாக்ஷி சொல்ல இருவரும் மாறி மாறி ஷட் அப் என கத்துகின்றனர்.

வெளியே அனுப்புங்கள்

வெளியே அனுப்புங்கள்

இப்படியாக முடிகிறது இரண்டாவது புரமோ. லாஸ்லியா ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டி வருகிறார். ஆரம்பத்தில் சிரித்துக்கொண்டும் டான்ஸ் ஆடிக்கொண்டும் இருந்த லாஸ்லியாவின் உண்மை முகம் இப்போதுதான் தெரியவருகிறது. இதனால் வெறுத்துப்போயுள்ள மக்கள் எப்படியாவது லாஸ்லியாவை முதலில் வெளியே அனுப்புங்கள் என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X