லாஸ்லியா.. டூ மச் ஆட்டிட்யூட்.. திமிர் பேச்சு.. சீக்கிரம் பேக்அப் ஆயிடும் போல!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா டூ மச் ஆட்டிட்யூட் காட்டி வருவது ரசிகர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா வந்த புதிதில் எல்லோருக்கும் பிடித்தவராக இருந்தார். எந்த வம்புதும்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்தார்.
எப்போது கவினை சைட் அடிக்கிறேன் என்று கூறினாரோ அப்போதே அப்போதே அவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்து விட்டது. எல்லோரும் முகத்துக்கு பின்னால் பேசுகிறார்கள், நான் மட்டும்தான் நல்லவள் என்ற ரீதியில் பேசி வருகிறார்.

நம்மை அசைக்க ஆளில்லை
கமல் வரும் வாரங்களில் லாஸ்லியாவுக்கு கைத்தட்டல்கள் அதிகமாக இருப்பதை உணர்ந்து, நம்மை அசைக்க ஆளில்லை என்ற எண்ணத்தில் ஆட்டிட்யூட் காட்டி வருகிறார் லாஸ்லியா. நேற்றைய மொட்ட கடுதாசி டாஸ்க்கின் போதும் கூட அவ்வளவு திமிர்தனமாக நடந்துகொண்டார்.

அவஷியம் இல்லை
என்னை பற்றி அடுத்தவர்களுக்கு சொல்ல வேண்டிய அவஷியம் எனக்கில்லை என்ற வார்த்தையை பலமுறை பயன்படுத்திவிட்டார். அடுத்தவர்களை பற்றி பேசுபவர்களிடம் நான் பேசுவதில்லை என்று கூறும் லாஸ்லியா, கவினுடன் மட்டும் ஏன் பேசுகிறார்? அவரிடம் மட்டும் ஏன் அப்படி வழிகிறார்.

கண்ணுக்கு தெரியவில்லையா?
சேரன், மதுமிதா, வனிதா பற்றியெல்லாம் எவ்வளவோ பின்னாடி பேசியிருக்கிறார் கவின். அதுமட்டும் ஏன் லாஸ்லியாவின் கண்ணுக்கு தெரியவில்லை.

கவினை பிடிக்கும்
சாக்ஷி பேசி முடித்த பிறகு, விளக்கம் அளிக்கும் பேர்வழி என மீண்டும் ஆட்டிட்யூட் காட்டினார் லாஸ்லியா. கவினுக்கும் எனக்கும் உள்ள ஃபிரன்ட்ஷிப் எங்களுக்கு தெரியும். அதை யாரிடமும் ஒவ்வொருத்தராக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே கவினை பிடித்தது. இப்போதும் பிடிக்கிறது. இந்த வீட்டை விட்டு வெளியே போன பிறகும் பிடிக்கும் என்றும் படு திமிராக கூறினார்.

விரைவில் பேக்அப்?
லாஸ்லியாவின் பேச்சும் பாடி லாங்குவேஜும் கொஞ்சமும் ரசிக்கும் படியாக இல்லை. மாறாக அவரை பார்க்கும் போது வெறுப்புதான் வருகிறது. மொத்ததில் லாஸ்லியாவின் ஆட்டிட்யூடால் அவர் விரைவில் பேக்அப் செய்யப்படுவார் என்றே கூறுகின்றனர் ரசிகர்கள்.

எரிச்சலாக உள்ளது
மேலும் லாஸ்லியா, ஓவியாவை போல இருக்க முயற்சி செய்கிறார். பேச்சுக்கு இடையில் சிரிப்பு, டான்ஸ் என அனைத்தும் ஓவியாவை போல ட்ரை பண்ணுகிறார். அதுவுமே பார்ப்பதற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
உலகுக்கே தெரியும்
பைத்தியம் கொஞ்சம் கொஞ்சமா முத்திகிட்டு போகுது. ஒரு சிரிப்பு சிரிக்கிறார் பயமாக இருக்கிறது. கொடுக்கிற விளக்கத்தில் ஒரு நடிப்பு தெரிகிறது, அது யாரு மாதிரி என்று இந்த உலகுக்கே தெரியும் என கூறுகிறார் இந்த நெட்டிசன்.
வெளியே வர தொடங்கிவிட்டது
லாஸ்லியா நீங்க சொல்லித் தான் உங்க கேரக்டர் தெரியனும்னு இல்லை.. உங்களை அறியாமலேயே வெளிய வரத் தொடங்கி ரொம்ப நாளாச்சு. ஆட்டிட்யூட் காட்ட ஆரம்பித்துவிட்டாள் என்று கூறுகிறார் இவர்.
நான் அப்படி இப்படி
உஸ்ஸ்ஸ்.. கேட்ட கேள்விக்கு பதில சொல்லுடினு சொன்னா.. பெருமை பீத்திகிட்டு இருக்கா.. நான் இப்படி அப்படினு.. என்று கடுப்பை காட்டுகிறார் இந்த நெட்டிசன்.
டைம் வந்துடுச்சு
லூசு-லியா.. பேக் பண்ண வேண்டிய டைம் வந்துடுச்சின்னு தோணுது.. ஆட்டிடியூட் காட்டுகிறார் என்று கூறுகிறார் இவர்.
விரைவில் நாமினேஷன்
லாஸ்லியா குரலில் ஒரு ஆணவம் தெரிகிறது. விரைவில் லாஸ்லியா நாமினேஷனுக்கு வருவார் என தெரிகிறது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











