ஹலோ.. நான் மரியாதை இல்லாமாதான் பேசுவேன்.. நான் இப்படிதான்.. மோகன் வைத்யாவை மிரளவிட்ட லாஸ்லியா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, மோகன் வைத்யாவை தரக்குறைவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியா ஆரம்பத்தில் அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகிவந்தார். எப்போதும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வந்தார்.
சாப்பிடுவது, டான்ஸ் ஆடுவது மட்டுமே தனது வேலை என்றிருந்த லாஸ்லியா எந்த பிரச்சனையிலும் தலையை கொடுக்காமல் இருந்தார். இதனால் அவரை மிக்ஸர் சாப்பிடுகிறார் என்று கூட கலாய்த்தனர் நெட்டிசன்கள்.

எதிரியை போல்
ஆனால் அவருக்கு எப்போது கவின் மீது காதல் வந்ததோ ஆளே டோட்டலாய் மாறிப்போயிவிட்டார். கவினை யாராவது ஏதாவது சொன்னால் உடனே அவர்களை எதிரியை போல் பார்க்க தொடங்கி விடுகிறார் லாஸ்லியா. யார் என்ன பேசினாலும் பதிலுக்கு பதில் மல்லு கட்டுகிறார்.

பின்னால் பேசுகிறார்
அதோடு மிகவும் திமிராகவும், ஆணவத்துடனும், நடந்துகொள்ளும் லாஸ்லியா மற்றவர்களின் கேள்விக்கும் அவஷியம் இல்லை அவஷியம் இல்லை என்று பொறுப்பற்ற தனமாக பேசி வருகிறார். பின்னால் பேசுவது பிடிக்காது என்று கூறிய லாஸ்லியா, தற்போது பின்னால் பேசுவதையே முழுநேர பணியாக கொண்டுள்ளார்.

வெளியேற்றுங்கள்
கவினுடன் கடலை, காதல் யாரிடமாவது சண்டை என வந்த வேலையை விட்டுவிட்டு சொந்த வேலையை பார்த்து வருகிறார் லாஸ்லியா. அவர் காட்டும் ஓவர் ஆட்டியூடால் மக்கள் அவர் மீது கடுப்பில் உள்ளனர். தயவு செய்து லாஸ்லியாவை வெளியேற்றுங்கள் என அழாத குறையாக கெஞ்சி வருகின்றனர்.

விருது வழங்கும் நிகழ்ச்சி
இந்நிலையில் நேற்றைய எபிசோடில், பிக்பாஸ் வீட்டில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொருவருக்கும் ஒரு விலங்கின் குணத்தோடு ஒப்பிட்டு விருது வழங்கப்பட்டது.

தூக்கியெறிந்த லாஸ்லியா
அப்போது லாஸ்லியாவுக்கு பச்சோந்தி என விருது வழங்கப்பட்டது. இதனை வாங்கிய லாஸ்லியா, கையோடு இது எனக்கு வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு சென்றார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பிக்பாஸ் வீடு ரணகளமானது.

ஹலோ...
லாஸ்லியா, சாக்ஷி, மோகன் வைத்யா என அனைவரிடமும் மல்லுக்கு நின்றார். பதிலுக்கு பதில் வாயடித்தார். இந்த வீட்டில் பச்சோந்தி விருது உனக்குதான் பொருத்தமாக இருக்கும் என மோகன் வைத்யா கூறியதும், ஹலோ என மிரட்டும் தொணியில் அவரின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் தரக்குறைவாக நடந்துகொண்டார்.

போடா வாடானு பேசுவீயா?
ஏற்கனவே ஷார்ட் டெம்பரான மோகன் வைத்யா, என்ன ஹலோ, மரியாதையா பேசு என்று லாஸ்லியாவுக்கு வார்னிங் கொடுத்தார். அதற்கும் அதிரடி பதில் கொடுத்த லாஸ்லியா இவ்வளவு நேரம் மரியாதையாதான் பேசினேன் என்று கூற, உடனே இனி போடா வாடா என்று பேசுவாயா என்று கேட்டார் மோகன் வைத்யா.

நான் இப்படிதான்
நான் மரியாதையா பேசமாட்டேன். நான் இப்படிதான், உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் மரியாதையா பேசிக்கொள்ளுங்கள் என வாய்க்கு வந்தபடி கத்தினார் லாஸ்லியா. லாஸ்லியாவின் பேச்சு, அவரது நண்பர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது அவர்களின் பார்வையிலேயே தெரிந்தது.

மிரண்டு போன மோகன்
லாஸ்லியாவின் பேச்சால் மிரண்டு போனார் மோகன் வைத்யா. அவர் மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டின் ஹவுஸ்மேட்களும் லாஸ்லியாவின் சுயரூபத்தை பார்த்து மிரண்டு போயினர். லாஸ்லியாவின் இந்த நடவடிக்கை பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்ததோடு அவர் மீதான வெறுப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











