பஞ்சுமிட்டாய் சேலை கட்டி.. பட்டு வண்ண ரவிக்க போட்டு.. ஆர்மின்னா இது ஆர்மி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியாவுக்காக அவரது ஆர்மியினர் ஓவர்டைம் பார்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் லாஸ்லியா இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஆவார். பார்க்க மூக்கும் முழியுமாக லட்சணமாக இருக்கிறார் லாஸ்.

யாரிடமும் சண்டை போடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தார். முக்கியமாக புரணி பேசாமல் இருந்தார். இதனால் மக்களின் ஆதரவை பெற்றார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அடுத்த நாளே லாஸ்லியாவுக்கு ஆர்மி தொடங்கிவிட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது லாஸ்லியா பிங்க் நிற சேலையில் அழகாக வலம் வந்தார்.
அந்த காட்சிகளையெல்லாம் வெட்டி ஒட்டி பஞ்சு மிட்டாய் பாடலை போட்டு அசத்தியுள்ளனர் லாஸ்லியா ஆர்மியினர். அந்த வீடியோவை ஏராளமானோர் ரசித்துள்ளனர்.
Comments
bigg boss tamil bigg boss tamil 3 bigg boss3 bigg boss 3 tamil பிக்பாஸ் தமிழ் பிக்பாஸ் தமிழ் 3 பிக்பாஸ் 3 பிக்பாஸ் 3 தமிழ்


Click it and Unblock the Notifications