எனக்கு ஃபைனல்ஸ் போக விருப்பம் இல்ல.. இனி இங்க இருக்க முடியாது.. கவின் போன துயரத்தால் கதறும் லாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 96 : கவினுக்காக விளையாடு லாஸ்- தர்சன் அட்வைஸ்-வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்று முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த கவின் பிக்பாஸ் கொடுத்த ஆப்ஷனை பயன்படுத்திக்கொண்டு 5 லட்சம் ரூபாய் பணத்துடன் வெளியேறிவிட்டார். ஹவுஸ்மேட்ஸ் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கவின் கேட்கவில்லை.

லாஸ்லியா மற்றும் சாண்டி அழுது கூறியும் அவர்களின் பேச்சை காதுகொடுத்து கேட்காமல் கிளம்பிவிட்டார் கவின். இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

நடந்தது நடந்துபோச்சு

நடந்தது நடந்துபோச்சு

அதில் அழுதுகொண்டிருக்கும் லாஸ்லியாவை சகபோட்டியாளரான தர்ஷன் சமாதானப்படுத்துகிறார். நடந்தது நடந்துபோச்சு, அதை விடு என்று லாஸ்லியாவிடம் கூறுகிறார் தர்ஷன்.

உங்க அப்பாவுக்காக விளையாடு

உங்க அப்பாவுக்காக விளையாடு

அதற்கு பதிலளிக்கும் லாஸ்லியா என்னால் ஃபைனல்ஸ் போக முடியாது. எனக்கு ஃபைனல்ஸ் போக ஆசை இல்லை என்று கூறுகிறார். இதனை கேட்கும் தர்ஷன், அவனுக்காகவும் உங்க அப்பாவுக்காகவும் விளையாடு என்கிறார்.

பத்தே பத்து நாள்

பத்தே பத்து நாள்

அதற்கு மீண்டும் எனக்கு ஃபைனல்ஸ் போக ஆசை இல்லை, அப்பாவுக்காகதான் இங்கு இருக்கிறேன் என்கிறார் லாஸ்லியா. தொடர்ந்து லாஸ்லியாவுக்கு ஆறுதல் கூறும் தர்ஷன், இனி அதைப்பத்தி யோசிச்சு, அழுது எதுவும் ஆகப்போறதில்லை. இன்னும் பத்தே பத்து நாள்தான், அதன்பிறகு என்ன தோனுகிறதோ அதை பண்ணு என்கிறார். இப்படியாக முடிகிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோ.

பெரும் துயரத்தில் லாஸ்லியா

பெரும் துயரத்தில் லாஸ்லியா

லாஸ்லியாவும் கவினும் தீவிரமாக காதலில் மூழ்கியிருந்தனர். இதனை கவனித்த லாஸ்லியாவின் அப்பா தன்னை ஞாபகப்படுத்த தனது போட்டோவை பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியாவுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியிருப்பது லாஸ்லியாவை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கண்ணீர்விட்டு கதறிய லாஸ்

கண்ணீர்விட்டு கதறிய லாஸ்

நேற்றே லாஸ்லியா, பிக்பாஸிடம் சென்று இனி என்னால் இங்கு இருக்க முடியாது, என்னால் மற்றவர்களுடன் நார்மலாக பேச முடியவில்லை, என்னை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பிவிடுங்கள் என்று கூறி கண்ணீர்விட்டு கதறினார்.

மறந்து விடாதீர்கள்

மறந்து விடாதீர்கள்

இதனைக்கேட்ட பிக்பாஸ் அவரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து சமாதானப்படுத்தினார். இந்த நிகழ்ச்சி உங்களை தாண்டி, உங்கள் குடும்பத்தை தாண்டி மக்களுக்கானது என்பதை மறந்துவிடாதீர்கள், தைரியமாக இருங்கள் என்று கூறினார். இதனைக் கேட்ட லாஸ்லியா ஓகே பிக்பாஸ் என்று கூறிவிட்டு சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X