கவினை குளிப்பாட்டிவிட்ட லாஸ்லியா.. என்ன நடக்குது பிக்பாஸ் வீட்டுல? கடுப்பாகும் பார்வையாளர்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 78 : House mates nominate vanitha

சென்னை: பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா கவினின் தலையில் ஷாம்பு போட்டு குளிக்க வைத்தது பார்வையாளர்களை எரிச்சலடைய செய்தது.

பிக்பாஸ் வீட்டில் உள்ள கவினும் லாஸ்லியாவும் காதலித்து வருகின்றனர். இவர்கள் காதல் உண்மையானதா அல்லது கன்டென்ட்டுக்கானதா என்பது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகுதான் தெரியும்.

ஏனெனில் பிக்பாஸ் வீட்டில் மட்டும் கவினுக்கு இது இரண்டாவது காதல். இதற்கு முன்னதாக பிக்பாஸ் வீட்டிற்கு வெளியேயும் கவினுக்கு காதல் இருப்பதாக கூறப்படுகிறது.

குளிப்பாட்டிய லாஸ்லியா

குளிப்பாட்டிய லாஸ்லியா

இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் கவின் தலையில் முட்டைகள் உடைக்கப்பட்டன. டாஸ்க் முடியும் வரை அப்படியே இருந்த கவின் பின்னர் பாத்ரூமில் கழுவ சென்றார். கூடவே சென்ற லாஸ்லியா கவினின் தலையில் ஷாம்பு போட்டு தேய்த்து குளிப்பாட்டி விட்டார். இதனை பார்த்த பார்வையாளர்கள் எரிச்சலாகிவிட்டனர்.

இது பிடிக்கல

இது பிடிக்கல

ஷெரினும் தர்ஷன், முகென் ஆகியோருக்கு முடி வெட்டி விடுகிறார். ஆனால் அது நட்பு என்பதால் பார்க்க அழகாக உள்ளது. ஆனால் கவினும் லாஸ்லியாவும் ஒட்டி உரசி பேசுவதும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடுவதும் பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

லாஸ்லியாதான் செய்யனுமா?

லாஸ்லியாதான் செய்யனுமா?

கவின் நட்புக்காக விட்டுக்கொடுக்கிறேன், நண்பர்களுக்காக தியாகம் செய்யப்போகிறேன், எனக்கு வெற்றி வேண்டாம் என்று கூறி வருகிறார். மேலும் வீ ஆர் த பாய்ஸ் ஊ ஊ என கூறிக்கொள்ளும் அவர்களில் ஒரு ஆண் நண்பர் கவினுக்கு உதவி செய்யக்கூடாதா? உதவி என்றாலும் லாஸ்லியாதான் குளிக்க வைக்க வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

பார்வையாளர்கள் கடுப்பு

பார்வையாளர்கள் கடுப்பு

இதுநட்பாக இருந்தால் அப்படி பார்க்கப்படாது ஆனால் இவர்களுக்குள் இருக்கும் உறவே வேறு. அப்படி இருக்கும் போது இருவரும் குளிப்பாட்டி விட்டுக்கொள்வது, ஒட்டி உரசி உட்காருவது பார்வையாளர்களை கடுப்பாக்கியுள்ளது.

என்க்ரேஜ் செய்யும் பிக்பாஸ்

என்க்ரேஜ் செய்யும் பிக்பாஸ்

ஏற்கனவே குழந்தைகளும் இந்த புரோகிராமை பார்த்து வருகிறார்கள் சில விஷயங்களை காட்டாதீர்கள் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையில் உள்ள காதலை வைத்து நிகழ்ச்சியை ஓட்ட இதுபோன்ற விஷயங்களை பிக்பாஸ் என்க்ரேஜ் செய்கிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X