For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    பாஜகவின் லோட்டஸ் டிவி: அக்டோபர் 11 முதல் ஒளிபரப்பு

    By Mayura Akilan
    |
    Lotus News
    கோவையை தலைமையாகக் கொண்டு புதிய 24 மணிநேர செய்திச் சேனல் ஒன்று உதயமாகியுள்ளது. பாஜக சார்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த செய்திச்சேனலுக்கு 'லோட்டஸ் டிவி' என்று பெயரிட்டுள்ளனர். அக்டோபர் 11ம் தேதி முதல் இந்த தொலைக்காட்சி உலகம் முழுவதும் ஒளிபரப்பை தொடங்கும் என்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளர்.

    செய்திகளுடன் பல்வேறு இளைஞர்களையும், ஆன்மீக ரசிகர்களையும் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சோதனை ஒளிபரப்பாக www.lotusnews.tv இணையத்தளத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

    லோட்டஸ் டிவியில் சக்தி கொடு, இப்படிக்கு நான், ஒரு கோவில் ஒருகதை, நவீனம் நாகரீகம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன.


    நாட்டில் நடைபெறும் சமூக அவலங்கள் இளைஞர்கள் விவாதிக்கும் நிகழ்ச்சி சக்தி கொடு. இதனை அருண்பிரசாத் தொகுத்து வழங்குகிறார். இளைஞர்கள் அனைவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

    'இப்படிக்கு நான்' என்ற நேர்காணல் நிகழ்ச்சி தடைகளைத் தாண்டி வெற்றி பெற்ற மனிதர்களை உலகிற்கு அறிமுகம் செய்கிறது இப்படிக்கு நான். பிரபலமான மனிதர்களை பேட்டி காண்கிறார் சரவணராம்குமார்.

    இந்தியாவில் உள்ள பிரபல கோவில்களைப் பற்றியும், அவற்றின் புராணங்களைப் பற்றியும் தெரிவிப்பதுதான் 'ஒரு கோவில் ஒரு கதை' ஆர்.ஜி. லட்சுமி நாராயணன் இதனை தொகுத்து அளிக்கிறார்.

    இன்றைய இளைய சமுதாயத்தினர் நவீனம் பற்றியும் நாகரீகம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றனர் அவர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சி 'நவீனம், நாகரீகம்'.

    உலகில் மறைந்து கிடக்கும் அதிசயங்களையும், விடைகாண முடியாத சூட்சுமங்கள் பற்றியும் அலசுகிறது 'எட்டாம் அறிவு' நிகழ்ச்சி. பால்வீதி மண்டலம், பூகோளம், சரித்திரம், அறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறியாத செய்திகளைத் தருகிறது.

    'சரித்திரத்தின் சரித்திரம்' நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களின் சரித்திரங்களையும், அவர்கள் சந்தித்த சாதனைகளையும், சோதனைகளையும் அனைவரும் அறிந்துகொள்ளச் செய்கிறது.

    இதன் செய்தி ஆசிரியராக சத்தியம் தொலைக்காட்சியில் பணியாற்றிய மணிமாறன் பொறுப்பேற்றுள்ளார்.

    தமிழ்நாட்டில் அதிமுகவிற்கு ஜெயா டிவி, திமுகவிற்கு கலைஞர் டிவி, தேமுதிகவிற்கு கேப்டன் டிவி என ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளன. தற்போது பாஜகவிற்கும் லோட்டஸ் டிவி தொடங்கப்பட்டுள்ளது.

    English summary
    The BJP wants to use the power of TV to make inroads into the south of the country as well. The party will launch a channel in Tamil Nadu on October 11.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more