சிறந்த கேமரா உமனாக ஆசை… சீரியல் நடிகை ரம்யா

By Mayura Akilan

சீரியல், டாக் ஷோ என பிஸியாக வலம் நடிகை ரம்யாவுக்கு நடிப்பை விட சிறந்த கேமரா உமனாகத்தான் ஆசை என்கிறார்.

பெப்பர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'சாட் வித் ரம்யா' எனும் நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரம்யா தொலைபேசி மூலம் கலந்துரையாடுகிறார். தேவையான அறிவுரை மூலம் விரிசல் ஏற்பட்ட உறவுகளை சீரமைப்பதோடு, மேலும் அவர்கள் எந்த விஷயத்திலும் தைரியமாகவும் எதிர்கொள்ள ஒரு நல்ல தோழியாகவும் செயல்படுகிறார்.

சீரியல் புகழ் ரம்யா

சீரியல் புகழ் ரம்யா

இது ஒரு காதல் கதை, மதுரை, சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் ரம்யா. பாலுமகேந்திரா கடைசியாக இயக்கிய தலைமுறைகள் படத்தில் நடித்தார். தற்போது சாட் வித் ரம்யா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சாட் வித் ரம்யா

சாட் வித் ரம்யா

தங்களின் உள்ளூணர்வுகளை மற்றொருவர் அல்லது பலருடன் பகிர்ந்து கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. மேலும் சில சமயங்களில் எது நல்ல உறவுக்கான பாலம் என்ற ஐயம் ஏற்பட்டு விடுகிறது. எனவே தங்களின் சந்தேகங்களை பலரும் ரம்யா உடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு வரவேற்பு

நிகழ்ச்சிக்கு வரவேற்பு

சாட் வித் ரம்யா நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பலதரப்பட்ட மக்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கு நல்ல வழிகாட்டும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி தருகிறது என்கிறார் ரம்யா.

போரடித்தால் விலகிடுவேன்

போரடித்தால் விலகிடுவேன்

எனக்கு போரடித்தாலோ, அல்லது ஆடியன்சுக்கு போரடித்தாலோ நிகழ்ச்சியிலிருந்து விலகிவிடுவேன்.

ஆண்டாள் அழகரில்

ஆண்டாள் அழகரில்

ரம்யா நடித்துள்ள ஆண்டாள் அழகர் தொடர் விஜய் டிவியில் அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

கேமரா உமனாக ஆர்வம்

கேமரா உமனாக ஆர்வம்

ரம்யாவுக்கு சீரியல், சினிமாவில் நடிப்பதை விட போட்டோகிராபியில்தான் ஆர்வம் அதிகமாக இருக்கிறதாம். என் கணவர் மாடலிங் போட்டோகிராபர். அவரைப்போலவே எனக்கும் போட்டோகிராபராக, கேமராஉமனாக ஆசை என்கிறார்.

போட்டோகிராபராக சாதிப்பேன்

போட்டோகிராபராக சாதிப்பேன்

இதற்காக நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த துறையில் அப்டேட் செய்து வருகிறேன். ஒரு நல்ல போட்டோகிராபராக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.

கேமராவுக்குப் பின்னால்

கேமராவுக்குப் பின்னால்

கேமராவுக்கு முன்னால் இருப்பதை விட பின்னால் இருந்து நிறைய சாதிக்க ஆசை இருக்கிறது. விரைவில் நடக்கும் என்கிறார் ரம்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X